நாட்டின் அடுத்த பிரதமராக குஜராத் முதல்வரும் மூத்த பாஜக தலைவருமான நரேந்திர மோடிக்கு 17 சதவீதம் மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். 16 சதவீதம் பேர் மட்டுமே பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ராகுல் காந்திக்கு 13 சதவீதம் பேரும், சோனியா காந்தி பிரதமராக 9 சதவீதம் பேரும் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு 3 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், ABP நியூஸ் மற்றும் சர்வதேச கருத்துக் கணிப்பு நிறுவனமான ஏ.சி.நீல்சன் ஆகியவை இணைந்து ஒரு சர்வே நடத்தியுள்ளன.
இந்தக் கருத்துக் கணிப்பின்படி, அடுத்த பிரதமராக 17 சதவீதம் பேர் குஜராத் முதல்வரும் மூத்த பாஜக தலைவருமான நரேந்திர மோடிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 16 சதவீதம் பேர் மட்டுமே இப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ராகுல் காந்திக்கு 13 சதவீதம் பேரும், சோனியா காந்தி பிரதமராக 9 சதவீதம் பேரும் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு நடந்த கருத்துக் கணிப்பின்போது பிரதமர் மன்மோகன் சிங்குக்கு 21 சதவீதத்தினரும், மோடிக்கு 12 சதவீதம் பேரும் மட்டுமே ஆதரவு தெரிவித்திருந்தனர். இப்போது மன்மோகன் சிங்குக்கான ஆதரவு 5 சதவீதம் சரிந்துள்ளது. அதே நேரத்தில் மோடிக்கான ஆதரவு 5 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன்மூலம் கடந்த 4 ஆண்டுகளாக 12 சதவீத ஆதரவை மட்டுமே பெற்று 4வது இடத்தில் இருந்த மோடி, இப்போது மன்மோகன் சிங்கை பின்னுக்குத் தள்ளி முதலிடத்துக்கு வந்துவிட்டார்.
அதே போல கடந்த ஆண்டு கருத்துக் கணிப்புடன் ஒப்பிடுகையில் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்திக்கு இருந்த மக்கள் ஆதரவும் பெரும் சரிவை சந்தித்துள்ளது. கடந்த ஆண்டு 19 சதவீத மக்களின் ஆதரவைப் பெற்று இரண்டாம் இடத்தில் இருந்த ராகுல் இப்போது 3வது இடத்துக்கு தள்ளப்பட்டுவிட்டார்.
Read: In English
அதே போல 14 சதவீத ஆதரவுடன் 3 இடத்தில் இருந்த சோனியா காந்தி 4வது இடத்துக்கு சரிந்துவிட்டார்.
அதே நேரத்தில் 37 சதவீதம் பேர் மன்மோகன் சிங்கின் செயல்பாடு நன்றாக உள்ளதாகவும், 33 சதவீதம் பேர் ஆவரேஜ் மார்க்கும் கொடுத்துள்ளனர். 28 சதவீதத்தினர் மட்டுமே மிக மட்டமான பிரதமர் என்று கூறியுள்ளனர். கடந்த ஆட்சியில் அவர் மிகச் சிறப்பாக பணியாற்றியதாக 36 சதவீதம் பேர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment