டெல்லி பாராளுமன்ற மேல்-சபையில் நேற்று உறுப்பினர் பிரகாஷ் ஜவகர் கொண்டு வந்த தெலுங்கானா தனி மாநிலம் அமைப்பதற்கான தனி நபர் தீர்மானத்தின் மீது காரசாரமான விவாதம் நடந்து கொண்டிருந்தது.
அப்போது காங்கிரஸ் பெண் உறுப்பினர் சபையில் தீப்பிடித்த கருகிய வாசனை பரவியிருப்பதாக புகார் கூறினார். இது ஜோக் அல்ல உண்மையில் வாசனை பரவுவதாகவும் இதனால் சபை நடவடிக்கையில் பங்கேற்க உறுப்பினர்களுக்கு சிரமம் ஏற்படுவதாகவும் கூறினார்.
இதைத்தொடர்ந்து துணை தலைவர் பி.ஜே.குரியன் சபையை பகல் 3.47 மணி அளவில் ஒத்திவைத்தார். 30 நிமிட நேர ஒத்திவைப்புக்கு பின்னர் மீண்டும் சபை கூடியதும் தனிநபர் மசோதா மீதான காரசார விவாதம் மீண்டும் தொடங்கியது.
அப்போதும் கருகிய வாசனை இருப்பதாக காங்கிரஸ் உறுப்பினர் ரேணுகாசவுத்ரி தொடர்ந்து புகார் கூறினார். அதைத்தொடர்ந்து சபை ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிகழ்வால் நேற்று ஒரே நாளில் மதிய உணவுக்கு பின்னர் மட்டும் சபை 3 முறை ஒத்திவைக்கப்பட்டது.

No comments:
Post a Comment