கூடங்குளம் அணுமின் நிலைய பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்று இங்கிலாந்து எம்.பி.க்கள் பிரதமர் மன்மோகன்சிங்குக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கும் கடிதம் அனுப்பியுள்ளனர்.
கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு மாதக் கணக்கில் தமிழகத்தில் போராட்டம் நடந்து ஓய்ந்துள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து எம்.பிக்கள் கடிதம் அனுப்பி எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
இங்கிலாந்து எம்.பி.க்கள் தமது கடிதத்தில், கூடங்குளம் சுனாமி மற்றும் நிலநடுக்கம் ஏற்படக்கூடிய பகுதியில் அமைந்துள்ளது. மேலும் சிறிய அளவில் எரிமலை வெடிப்புகளும் ஏற்பட்டுள்ளன. தண்ணீர் பற்றாக்குறையாலும் கூடங்குளம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சர்வதேச அணுசக்தி கழகத்தின் பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதால் அணுமின் நிலைய கட்டுமானப் பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளனர்.
மேலும் கூடங்குளத்தில் மக்கள் நடத்தப்படும் விதம் குறித்தும் இங்கிலாந்து எம்.பிக்கள் தங்களது கடிதத்தில் கவலை தெரிவித்துள்ளனர்.

No comments:
Post a Comment