கடந்த மார்ச் 26-ந் தேதி தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத் தொடர் துவங்கியது. கூட்டத்தொடரின் துவக்கத்திலேயே நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பட்ஜெட்டை சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்நிலையில் 52 நாட்களாக நடைபெற்று வந்த இந்த பட்ஜெட் கூட்டத் தொடர் இன்றுடன் முடிவுற்றது.
இன்றுடன் அ.தி.மு.க. அரசு பதவியேற்று ஓராண்டு நிறைவு பெறுவதால், அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதா மற்றும் அமைச்சர்களுக்கு தொண்டர்களும், அ.தி.மு.க. கூட்டணிக் கட்சியினரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் காவல் துறை அதிகாரிகளுக்கு சொந்த வீடு திட்டம், உயர்த்தப்பட்ட மின்கட்டணம் விசைத்தறி உரிமையாளர்களுக்காக குறைக்கப்பட்டது, தி.மு.க. எம்.எல்.ஏக்கள் 4 பேர் சஸ்பெண்டைத் தொடர்ந்து கடந்த ஏப்.20-ந் தேதி முதல் தி.மு.க. சட்டசபை நிகழ்ச்சிகளை புறக்கணித்தது என பல நிகழ்வுகள் நடந்தேறியது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment