பொருளாதார பிரச்சனை அல்லது சொந்த பிரச்சனை காரணமாக ஓமனில் 6 நாட்களுக்கு ஒரு இந்தியர் தற்கொலை செய்துகொள்வதாக அரசு தகவல்கள் தெரிவித்துள்ளன.
கடந்த 4 மாதத்தில் மட்டும் ஓமனில் 23 இந்தியர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் தலா 8 இந்தியர்களும், மார்ச்சில் 4 பேரும், ஏப்ரலில் 3 பேரும் தற்கொலை செய்துள்ளனர். தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை குறித்த புள்ளிவிவரம் மஸ்கட்டில் உள்ள இந்திய தூதரகத்திடம் உள்ளது என்று டைம்ஸ் ஆப் ஓமன் பத்திரி்க்கை தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் ருவி பகுதியில் வசித்து வந்த பெண் ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு 3 குழந்தைகளின் உள்ளனர். கடந்த 2010ம் ஆண்டு ஓமனி்ல் 50 இந்தியர்களும், 2011ல் 54 பேரும் தற்கொலை செய்துள்ளனர்.
ஓமனில் உள்ள இந்தியர்களிடையே அதிகரி்த்து வரும் தற்கொலை எண்ணத்தை மாற்ற இந்திய சமூக மற்றும் மத அமைப்புகள் முயற்சி செய்து வருகின்றன.
நிதி பிரச்சனை அல்லது சொந்த பிரச்சனைகளால் தான் இந்தியர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்று மனநல மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மனஅழுத்ததில் உள்ள இந்தியர்களுக்கு உதவுவதற்காகவே இந்திய உயர் அதிகாரி தலைமையிலான குழு செயல்பட்டு வருவதாக இந்திய தூதரக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment