புதுவை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த பட்டமளிப்பு விழாவில் அமெரிக்காவுக்கான இந்திய தூதர் நிரூபமாராவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் அளிக்கப்பட்டது. ஆனால் நிரூபமாராவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க புதுவை நாம் தமிழர் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கடந்த 3 நாட்களுக்கு முன்பு பல்கலைகழக வாயில் முன்பு ஆர்ப்பாட்டமும் நடத்தினர். இதற்கிடையே கவுரவ டாக்டர் பட்டம் பெறவரும் நிரூபமாராவுக்கு கறுப்பு கொடி காட்டபோவதாக புதுவை நாம் தமிழர் கட்சியினர் அறிவித்து இருந்தனர். அதன்படி புதுவை நாம்தமிழர் கட்சியினர் மாநில பொறுப்பாளர் அருமைதாசன் மற்றும் வேலுச்சாமி ஆகியோர் தலைமையில் கறுப்புக் கொடி காட்டி புதுவையில் இருந்து காலாப்பட்டு பல்கலைகழகத்துக்கு சென்றனர்.
அவர்கள் பிள்ளைச்சாவடி அரசு என்ஜினீயரிங் கல்லூரி அருகே வந்தபோது அவர்களை காலாப்பட்டு போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். 5 பெண்கள் உள்பட 60 பேர் கைது செய்யப்பட்டனர்.

No comments:
Post a Comment