சூர்யா நடித்த 7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்தவர் டாங்லி ஹாங்காங்கை சேர்ந்தவர். இவர் குங்பூ கலையில் பிளாக் பெல்ட் பெற்றவர். சீன மொழி படங்களில் நடித்து வருகிறார்.
டாங்லி நடித்த பிளாக் டிராகன் படம் சமீபத்தில் ரிலீசாகி சீனா ஹாங்காங்கில் வெற்றிகரமாக ஓடி வசூலை வாரி குவித்தது. ஜேம்ஸ்பாண்ட் பட பாணியில் கடத்தல் கும்பலை மடக்கி பிடிக்கும் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.
படத்தில் வரும் மூன்று சண்டை காட்சிகள் குங்பூ ஸ்டைலில் பார்ப்போரை பிரமிக்க வைக்கும் விதத்தில் எடுக்கப்பட்டுள்ளன. இந்த படத்தை நாக் ஸ்டூடியோ தமிழில் டப்பிங் செய்து வெளியிடுகிறது. விரைவில் இப்படம் தமிழகமெங்கும் ரிலீசாகிறது.
No comments:
Post a Comment