மாவோயிஸ்டுகளின் பிடியில் சிக்கியிருந்து தற்போது விடுதலையாகவுள்ள சட்டிஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்ட கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன் இன்று விடுதலையாகிறார். அவரை அழைத்து வருவதற்காக ஹெலிகாப்டர் மூலம் தூதுவர்கள் விரைந்துள்ளனர். இன்று பிற்பகல் வாக்கில் அலெக்ஸ் பால் மேனன் விடுதலையாகி வருவார் என்று தெரிகிறது.
முன்னதாக செவ்வாய்க்கிழமை மாலை பிபிசிக்கு மாவோயிஸ்டுகள் அளித்த அறிக்கையில், மே 3ம் தேதி கலெக்டர் அலெக்ஸ் பால் மேனனை, தங்களுடன் சட்டிஸ்கர் மாநில அரசு சார்பில் பேச்சு நடத்திய இரண்டு தூதுவர்களிடமும் ஒப்படைக்கவிருப்பதாக தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து இன்று காலை தூதர்கள் பி.டி.சர்மா மற்றும் பேராசிரியர் ஹர்கோபால் ஆகிய இருவரும் ஹெலிகாப்டர் மூலம் கிளம்பிச் சென்றனர்.சிந்தால்னார் என்ற இடத்தை நோக்கி அவர்கள் காலையில் கிளம்பிச் சென்றனர். அங்கிருந்து அவர்கள் டட்மெத்லா என்ற இடத்திற்குச் செல்கின்றனர். இது மாவோயிஸ்டுகள் கட்டுப்பாட்டில் உள்ள வனப்பகுதியாகும். இங்குதான் கலெக்டரை அவர்கள் சிறை பிடித்து வைத்துள்ளனர். அடர்ந்த வனப் பகுதிக்குள் தூதர்கள் சென்று, அலெக்ஸ் பால் மேனனை மீட்டு வரவுள்ளனர்.
அலெக்ஸ் பால் மேனன் இன்று விடுதலையாவதைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர் பெரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இன்று பிற்பகல் வாக்கில் ராய்பப்பூரை வந்தடைவார் அலெக்ஸ் என்று தெரிகிறது.
ஏப்ரல் 21ம் தேதி அலெக்ஸ் பால் மேனன் கடத்தப்பட்டார் என்பது நினைவிருக்கலாம்.
No comments:
Post a Comment