அலகாபாத் ஐகோர்ட்டின் லக்னோ கிளையில் அசோக் பாண்டே என்ற வக்கீல், சச்சின் தெண்டுல்கரை டெல்லி மேல்-சபை எம்.பி.யாக நியமித்ததை எதிர்த்து பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார்.
அரசியல் சட்டம் 80 (3)-ன் கீழ் கலை, இலக்கியம், அறிவியல், சமூக சேவை ஆகியவற்றில் சிறந்தவர்களுக்கு மட்டுமே எம்.பி. பதவி அளிக்க முடியும். விளையாட்டு வீரருக்கு எம்.பி. பதவி அளிக்க அரசியல் சட்டத்தில் இடமில்லை.
ஆகவே, அரசியல் சட்டத்தை மீறி தெண்டுல்கருக்கு அளிக்கப்பட்டுள்ள எம்.பி. பதவியை ரத்து செய்ய வேண்டும் என்று அவர் தனது மனுவில் குறிப்பிட்டு உள்ளார்.
இந்த மனுவில், தெண்டுல்கர் தவிர மத்திய அரசு, மேல்-சபை (செயலாளர்) ஆகியோரும் பிரதிவாதிகளாக சேர்க்கப்பட்டு உள்ளனர். நாளை (வெள்ளிக்கிழமை) இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிகிறது.
No comments:
Post a Comment