புதுக்கோட்டை இடைத்தேர்தல் ஜூன் 12 ந் தேதி நடத்தப்பட உள்ளது. இந்த நிலையில் மற்ற கட்சிகள் தேர்தல் பணியை தொடங்கும் முன்பே அ.தி.மு.க மட்டும் வேலைகளை தொடங்கி பஞ்சபாண்டவர்களாக 5 அமைச்சர்களை அனுப்பி செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்தி தொண்டர்களை உற்சாகப்படுத்தியது.
இந்த நிலையில் தொகுதியை வைத்திருந்த சி.பி.ஐ, இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவித்ததை தொடர்ந்து தி.மு.க தலைமையும் போட்டியிட வேண்டாம் என்ற முடிவை அறிவிக்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.
இந்த போட்டியில்லை என்ற அறிவிப்புகள் அ.தி.மு.க வினர் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத் தியுள்ளது.
இது பற்றி அ.தி.மு.க வினர் கூறும் போது, இடைத்தேர்தல் என்றால் பணத்திற்கு பஞ்சமில்லாத களமாக இருக்கும். ஆளும்கட்சியினருக்கு திருவிழா கொண்டாட்டமாக இருக்கும்.
சங்கரன்கோயில் இடைத்தேர்தலில் பொதுமக்கள் தெரிந்து கொண்டார்கள். அதே போல புதுக்கோட்டை இடைத் தேர்தலும் பெரிய கொண்டாட்டமாக இருக்கும் என்று கட்சிகாரர்கள் பெரும் மகிழ்சியில் இருந்தோம்.
ஆனால் தொகுதியை வைத்திருந்த சி.பி.ஐ யும் நிற்கவில்லை என்ற அறிவித்தவிட்டது. அடுத்து தி.மு.க வும் இதே நிலை எடுத்தால் எங்கள் இடைத்தேர்தல் திருவிழா கொண்டாட்டம் நடக்காது.
இப்பவே பெரிய கனவுகளோடு தேர்தல் களத்திற்கு தயாராகி விட்டோம். ஆனால் இனி எங்க கட்சி மேலிடம் கூட பணம் கொடுக்காதே அப்பறம் எப்படி எங்கள் கனவு நிறைவேறும் என்று கவலையுடன் கூறியதுடன். தி.மு.க போட்டிக்கு வந்தால் நிச்சயம் எங்கள் கனவு நிறைவேறும் என்றும் கூறுகின்றனர்.
No comments:
Post a Comment