மதுரை ஆதீனம் அருணகிரிநாத சுவாமிகள் 293-வது ஆதீனமாக நித்யானந்தாவை நியமித்துள்ளார். மதுரை ஆதீனம் சுமார் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மடம் ஆகும்.
இதில் ஆதீனத்தை நியமிக்க விதிமுறைகள் உள்ளன. அதனை மீறி மதுரை ஆதீனம் செயல்பட்டது மற்ற ஆதீனங்களை அதிர்ச்சிகுள்ளாக்கியது.
இந்நிலையில் இது குறித்து தருமபுரம் ஆதீனம் சண்முகதேசிக சுவாமிகள் தலைமையில் இன்று மாலை தருமபுரத்தில் உள்ள ஆதீனம் கலைக்கல்லூரியில் அனைத்து ஆதீனங்களைக் கொண்ட அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் திருவாவடுதுறை ஆதீனம், பேரூர் ஆதீனம், திருப்பனந்தாள் ஆதீனம், வடலூர் ஊரனடிகள் சுவாமிகள் உட்பட மேலும் பல்வேறு சுவாமிகள் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில், நித்தியானந்தா விவகாரம் பலத்த எதிர்ப்புகளைக் கிளப்பியது. அப்போது பேசிய பலரும், நித்தியானந்தா நியமனத்தை இன்னும் பத்து தினங்களுக்குள் மறுபரிசீலனை செய்து மதுரை ஆதினம் அறிவிப்பு வெளியிட வேண்டும். இல்லை என்றால், இது தொடர்பாக அனைத்து ஆதீனங்களும் சேர்ந்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முயற்சி செய்வோம். இது தொடர்பாக தமிழக அரசு தலையிட்டு சுமூகத் தீர்வு காண வலியுறுத்துவோம் என்று இந்தக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
No comments:
Post a Comment