பிரபல ஜோதிடர் புகழ் பெற்ற இந்தி நடிகைகளின் ராசியை வைத்து ஜோதிடம் கணித்துள்ளார்.
அதன் விவரம் வருமாறு:-
கத்ரினா கைப் (கடகம் ராசி):-
தொழிலில் அதிக அக்கறை செலுத்தும் நிலை உண்டாகும் என்பதால், குடும்ப வாழ்க்கையை கொஞ்சம் இழக்க நேரிடும். தங்கள் கவனத்தை இரண்டிலும் சமமாக (தொழில்- வீடு) செலுத்தி வந்தால் குறுகிய காலத்திலேயே வெற்றியை அடைவீர்கள். உங்கள் திட்டங்களை சிதைக்க முயல்பவர்கள் நிச்சயம் தோற்றுப் போவார்கள். முயற்சியில் நம்பிக்கையுடன் இறங்குங்கள். சந்தேகம் முயற்சிக்கு முட்டுக்கட்டை என்பதை நினைவில் கொண்டு செயல்படுங்கள்.
ஜெனிலியா (சிம்மராசி):-
அதே சமயம், பெரிய திட்டங்களில் இப்போது ஈடுபடுவது பலன் தராது. சுய முடிவுக்கு சற்று மூட்டை கட்டி விட்டு, சக நண்பர்களின் ஆலோசனைக்கு செவிமடியுங்கள். சந்தோஷமான வாழ்க்கை அமையும் என்பதில் சந்தேகமில்லை. இந்த வாரம் தங்களுக்கு அனுகூலமான வாரம்தான்.
ஐஸ்வர்யா ராய் (விருச்சிகம்):-
இந்த வார தொடக்கத்தில் நல்ல செய்திகள் வரக்கூடும். மற்றவர்களின் சிந்தனையை புறந்தள்ளி விட்டு, தங்களின் ஒரிஜினாலிடி மற்றும் ஆக்கத்துக்கு முக்கியத்துவம் அளியுங்கள். எந்த வேலையை கொடுத்தாலும் செய்து முடிப்பேன் என்ற நம்பிக்கையை மற்றவர்களிடம் ஏற்படுத்துங்கள். தற்போது உங்களிடம் பலமான தலைமைப் பண்பு காணப்படுகிறது. எனவே நீங்கள் என்ன செல்கிறீர்கள் என்று கேட்க மக்கள் ஆர்வமாக உள்ளனர். வழக்கத்துக்கு மாறான சில தொடர்புகள் உங்களுக்கு லேசான தலைவலியை ஏற்படுத்தலாம். பழைய ஐடியாக்களை துறந்து விடுங்கள். அதுபற்றி பேசுவதால் எந்த பலனும் விளையாது. எனவே புதிய சிந்தனைக்கும் (ஐடியா), முயற்சிக்கும் முக்கியத்துவம் கொடுங்கள். சகல செல்வங்களும் உங்கள் வீட்டை தேடிவரும்.
தீபிகா படுகோனே (மகரம்):-
கடந்த வார செய்திகள் உங்கள் மனதை புண்படுத்துவதாக அமைந்திருந்தன. ஆனால் இந்த வார துவக்கமே உங்களுக்கு சாதகமான அம்சங்களை உடையதாக இருக்கிறது. இந்த வாரம் தங்களுக்கு சாதகமான செய்திகள் வந்து சேரும். உங்கள் தொழிலில் இடையில் ஏற்பட்ட தொய்வு நிலை மாறி, மீண்டும் பிஸியாகி விடுவீர்கள். அதே சமயம் நீங்கள் கவனமுடன் செயல்பட வேண்டியது மிகவும் அவசியம் ஆகும். ஒன்றை ஒப்புக் கொள்ளும் முன்பு பல முறை யோசித்து அதன்பின் முடிவு எடுங்கள். உங்களை சேர்ந்தவர்களிடம் கனிவாக நடந்து கொள்ளுங்கள். அதுவே உங்களுக்கு மகிழ்ச்சியை தேடித்தரும். உங்களுக்கு எதிராக சிலர் செய்து வரும் காரியங்கள் இந்த வாரத்தில் தோல்வியை சந்திக்கும். எதிரிகளின் முனை, மழுங்கி விடும். புதிய நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். எல்லா வளமும் உங் களை வந்து சேரும்.
பிரீத்தி ஜிந்தா (கும்பம்):-
சூரியனும், புதனும் ஒரே மூலையில் சந்திப்பதால் உங்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். குடும்பம் மற்றும் சொத்துக்கள் விருத்தியடையும். இந்த வார தொடக்கத்தில் இருந்தே நிச்சயமாக நன்மைகள் தேடி வர தொடங்கும். வாழ்க்கை என்பது பொறுப்புகளும், பணிகளையும் உள்ளடக்கியது. திட்ட மிட்டு எதையும் செய்தால் வெற்றி நிச்சயம். சுற்றங்கள் தங்களுக்கு மகிழ்ச்சியை தருவார்கள். தங்கள் சொந்த விஷயங்களை நெருங்கிய நண்பர்களுடன் மட்டுமே பகிரிந்து கொள்ளுங்கள். சமூக சேவையை எந்த சூழ்நிலையிலும் விட்டு விடாதீர்கள். சிலரின் உதவி இல்லாமல் குறிக்கோளை அடைய முடியாது என்று நினைத்து கவலைப்படா தீர்கள். குடும்பத்துடனும், நண்பர்களுடனும் நல்ல தொடர்பை வைத்திருங்கள். வெற்றி தானாக வந்து சேரும்.
இவ்வாறு அவர் நடிகைகள் பற்றி ஜோதிடம் கூறியுள்ளார்





No comments:
Post a Comment