தமிழகத்தின் இனி வரும் தேர்தல்களில் சாதிக் கட்சிகளுடன்தான் கூட்டணி அமைப்போம் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் ஏலகிரியில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
சமச்சீர் கல்வியால் உருப்படியாக பயன் இல்லை. தமிழ்நாட்டில் கல்வி கட்டணம் கூடுதலாக வசூலிக்கின்றனர். பொறியியல் படிப்புக்கான கட்டணத்துக்கு சமமாக இருக்கிறது பிரீகேஜி கட்டணம்.
நாடாளுமன்றத் தேர்தலில் 10 தொகுதிகளில்தான் பாமக போட்டியிடும். அதுவும் சாதிக் கட்சிகளுடன்தான் கூட்டணி அமைப்போம். திராவிட கட்சிகளோடு கூட்டணி கிடையாது. புதுக்கோட்டை இடைத்தேர்தலைப் பொறுத்தவரையில் போட்டியிடும் கட்சிகள் ஓட்டுக்குப் பணம் கொடுக்கமாட்டோம் என அறிவிக்க வேண்டும்.
வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு கோரும் போராட்டம் பற்றி செப்டம்பரில் அறிவிப்போம். திருப்பத்தூரை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் உருவாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டம் நடத்துவோம் என்றார்.
No comments:
Post a Comment