‘உள்ளத்தை அள்ளித்தா’ சினிமா படத்தில் நடிகர் செந்தில் கடத்தல் காட்சி ஒன்றில் பணம் கேட்டு மிரட்டுவார். அப்போது, தான் கேட்ட பணத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக இறங்கி வந்து கடைசியில் இருப்பதையாவது கொடுங்கடா என்று கூறுவார்.
அதே பாணியில் தினேஷ் கடத்தப்பட்டதாக கூறி போலீசில் சிக்கிய வாலிபர்கள் சிவா, ராஜேஷ் 2 பேரும் சினிமா காமெடி பாணியில் செல்போனில் பேசி மிரட்டல் விடுத்துள்ளனர். ரூ,8 லட்சத்தில் தொடங்கி... 5 லட்சம்... 3 லட்சம்... என இறங்கி வந்த 2 வாலிபர்களும் கடைசியாக ரூ.50 ஆயிரம் ரூபாய் கேட்டுள்ளனர். ஆனால் தினேசின் தந்தை ஏழுமலை, என்னிடம் இவ்வளவு பணம் இல்லை என்று கூறியுள்ளார்.
சரி இருப்பதையாவது கொடுங்கள் என்று கெஞ்சி கூத்தாடிய 2 பேரும், அவரை வேலூருக்கு வரச்சொல்லியுள்ளனர். ஒரு கட்டத்தில் இனிமேல் செல்போனில் இருந்து பேசுவதற்கு காசு இல்லை. 100 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்யுங்கள் எனவும் கூறி செல்போன் நம்பரையும் கொடுத்துள்ளனர்.
போலீசாரின் திட்டப்படி ஏழுமலையும் அவர்களின் செல்போனுக்கு ரீசார்ஜ் செய்துள்ளார். தற்போது போலீஸ் பிடியில் சிக்கியிருக்கும் மிரட்டல் காமெடி ஆசாமிகள் இருவரும் தெரியாமல் செய்து விட்டோம் மன்னித்து விடுங்கள் என்று கெஞ்சிக் கொண்டிருக்கிறார்கள்.

No comments:
Post a Comment