மண முறிவு என்பது பெண்களுக்கு சாதகமானதாக இருக்க வேண்டும் என்ற எதிர்கட்சிகளின் கோரிக்கைக்கிடையில், ராஜ்ய சபாவில் மற்றொரு மசோதா ராஜ்ய சபாவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
அம்மசோதாவின்படி டைவர்ஸ் ஆன பிறகும் கணவனின் அசையா சொத்தில் பங்கு உண்டு என்று தெரிவிக்கின்றன.
'டைவர்ஸ்' ஆவதற்கு முன் உள்ள ஆறு மாத கால அவகாசத்தை அம்மசோதாவிலிருந்து நீக்கவில்ல என்றும், 'டைவர்ஸ்' கோரி விண்ணப்பிக்கும் போது இரு தரப்பினரும் சேர்ந்து தாக்கல் செய்ய வேண்டும் அம்மசோதாவில் சேர்க்கப்பட்டுள்ளது.
ஒரு வேளை கணவன் மனைவி பிரிய நேரிட்டால் கணவனின் அசையா சொத்தில் இருந்து மனைவி மற்றும் குழந்தைகளுக்கும் பங்கு வழங்கவேண்டும் என அம்மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இம்மசோதா குறித்தான உறுப்பினர்களின் கருத்துக்களை தெரிந்த பின் மே 2 ம் தேதி பதிலளிக்கப்படும் எனவும் வேண்டுமென்றால் திருத்தங்கள் கொண்டு வரப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment