மதுரை ஆதீன மடத்துக்கு இளைய ஆதீனமாக நித்யானந்தா நியமிக்கப்பட்டார். இதற்கு பல்வேறு இந்து அமைப்புகள், ஆதீனங்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆதீன மீட்பு குழு என்ற பெயரில் அமைப்பு ஏற்படுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மதுரை ஆதீன பாதுகாப்பு குழு என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த அமைப்பின் முதல் ஆலோசனை கூட்டம் மதுரை ஆதீன மடத்தில் இன்று நடந்தது.
இந்த கூட்டத்தில் ஆதீன பாதுகாப்புக்குழுவில் இடம் பெற்று உள்ள பொள்ளாச்சி ஆதீனம், ஆத்ம சைதன்ய சுவாமி, இந்து தர்மா சக்தி, இந்து மக்கள் கட்சி (ஸ்ரீதர் அனுமன் சேனை) தேவர் பேரவை, அம்பேத்கார் அமைப்பு உள்பட 50 அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மதுரை ஆதீன மடத்தை காப்பது, மடத்தின் வளர்ச்சிக்காக பாடுபடுவது, மக்களிடம் ஆன்மீக சிந்தனையை எவ்வாறு பரப்புவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

No comments:
Post a Comment