மென் இன் பிளாக் 3 என்ற ஹாலிவுட் படம் ரஷ்யாவில் பிரபலங்களுக்காக திரையிடப்பட்டபோது நாயகன் வில் ஸ்மித்தை உதட்டில் முத்தமிட வந்த நிருபரின் கன்னத்தில் அவர் அறைந்தார்.
மென் இன் பிளாக் 3 என்னும் ஹாலிவுட் படம் பிரபலங்களுக்காக ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் திரையிடப்பட்டது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக வந்த படத்தின் நாயகன் வில் ஸ்மித் சிவப்பு கம்பளத்தில் நடந்து வந்தார். அப்போது உக்ரைனைச் சேர்ந்த தொலைக்காட்சி சேனல் ஒன்றின் நிருபர் விட்டாலி செட்யுக் என்பவர் வில் ஸ்மித்தின் உதட்டில் முத்தமிட முயன்றார்.
இதை சற்றும் எதிர்பாராத ஸ்மித் நிருபரை தள்ளிவிட்டு அவர் கன்னத்தில் ஒரு அறைவிட்டார். அந்த நிருபர் பிரபலங்களை முத்தமிடும் வழக்கம் உள்ளவராம்.
செட்யுக் தனது உதடுகளை ஸ்மி்த்தின் உதடுகளைத் தொடும் அளவிற்கு நெருங்கி வந்ததால் தான் அவர் அறைந்துவிட்டார் என்று இந்த கூத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்தார்.
நிருபரை அறைந்தாலும் ஸ்மித் எதுவும் காட்டிக்கொள்ளாமல் வழக்கம் போல் தனது ரசிகர்களுக்கு ஆட்டோகிராப் போட்டார், நிருபர்களுக்கு பேட்டியும் கொடுத்தார்.

No comments:
Post a Comment