நித்தியானந்தாவை நியமிப்பதற்கு முன்பு பிற ஆதீன தலைவர்கள் என்னை மட்டும் தனியாக வர வேண்டும் என்னை கூப்பிட்டார்கள். ஆனால் அவர்களுடன் கலந்து பேச வேண்டிய அவசியம் எனக்கில்லை என்று கூறியுள்ளார் மதுரை ஆதீனம்.
இதுகுறித்து மதுரையில் செய்தியாளர்களிடம் ஆதீனம் பேசுகையில்,
திருவாவடுதுறை ஆதீனம் பதவிக்கு வரும் போதும் எதிர்ப்பு கிளம்பத்தான் செய்தது. ஆதீன கர்த்தரை நியமிக்க யாரையும் கேட்க வேண்டியதில்லை.
சிவபெருமானின் உத்தரவுப்படி தான் நான் இவரை நியமித்தேன். நித்தியை நியமிப்பதற்கு முன், அவர்கள் என்னை பேச அழைத்தார்கள். ஆனால் என்னை மட்டும் தான் தனியாக வரவேண்டும் என்றார்கள். அவர்களிடம் கலந்து பேச வேண்டிய அவசியமில்லை.
மற்ற எந்த ஆதீனத்திற்கும் இதில் சம்பந்தம் இல்லை. நித்தி முறையாக சமய தீட்சதை, விசேஷ மந்திரம் என அனைத்தும் பெற்றுத் தான் ஆதீனமாக பதவி ஏற்றார். இதில் மரபு மீறல் இல்லை. இங்கு நான் சந்தோஷமாக இருக்கிறேன். எந்த ஒரு கஷ்டமும் இல்லை.
சன்னிதானத்தை எப்போதும் இங்கு வந்து பார்க்கலாம். இங்கு பழைய பணியாளர்கள் அனைவரும் பணிபுரிந்து தான் வருகிறார்கள். இந்த சொத்தை அரசுடமை ஆக்க வேண்டும் என்று கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர். ஆனால் கலெக்டர் அதனை செய்ய மாட்டார் என்றார் அதீனம்.
No comments:
Post a Comment