வியட்நாமுடன் கடந்த 2006-ல் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி, தென் சீனக்கடல் பகுதியில் பெட்ரோலிய எண்ணை வளம் குறித்த ஆய்வை இந்தியா மேற்கொண்டு வந்தது. இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது.
சீனாவின் எதிர்ப்புக்கு பணியாமல் இந்தியா தொடர்ந்து ஆய்வை மேற்கொண்டு வந்தது. இந்நிலையில் இந்த ஆய்வை கைவிடுவதாக இந்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் திடீரென்று அறிவித்துள்ளது.
வர்த்தகம் மற்றும் பொருளாதார நிலை கருதி இந்த ஆய்வை கைவிடுவதாக இதற்கு விளக்கம் கூறியுள்ளது. இந்த ஆய்விற்காக இந்திய அரசு ரூ. 244 கோடி முதலீடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆய்வை கைவிடப்பட்டது குறித்து பெட்ரோலியத் துறை அமைச்சகம், வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியிருக்கிறது என்று டெல்லியிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக இந்த தென் சீன கடல்பகுதி முழுவதும் தங்களுக்கே சொந்தம் என சீனா உரிமை கொண்டாடியது. ஆனால் அதற்கு வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா, புருனே மற்றும் தைவான் ஆகிய நாடுகள் தங்களுக்கும் அந்த பகுதியில் பங்கு உண்டு என்று சீனாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் வியட்நாம் கடல் பகுதிகளில் எண்ணை வளம் குறித்து ஆய்வை இந்தியா மேற்கொள்ளக்கூடாது என்று கடந்த மார்ச்சி்ல், இந்தியாவுக்கு சீனா கடும் எச்சரிக்கை விடுத்திருந்தது.
தென் சீனக் கடல் பகுதியானது உலக நாடுகள் அனைத்துக்கும் சொந்தமானது எனவும், வர்த்தக வழித்தடமான அப்பகுதியில் எந்த நாட்டின் தலையீடும் இருக்கக் கூடாது எனவும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment