ராயல் சேலஞ்ர்ஸ் அணி வீரர் லூக் போமர்ஸ்பேச் மீது பாலியல் புகார் கூறும் அமெரிக்க பெண்மணியின் நடத்தை பற்றி அணியின் உரிமையாளர் விஜய் மல்லையாவின் மகன் சித்தார்த் மல்லையா கேள்வி எழுப்பியுள்ளார்
நேற்று டெல்லி டேர்டெவில்ஸ் அணியுடனான போட்டிக்குப் பிறகு விடுதிக்குச் சென்ற லூக்போமர்ஸ்பேச் விருந்து ஒன்றில் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது அமெரிக்கப் பெண்ணிடம் அவர் தவறாக நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதைத் தட்டிக் கேட்ட அவரது வருங்கால கணவரை அடித்ததாகவும் கூறப்படுகிறது. இதில் அப்பெண்ணும் அவரது வருங்கால கணவரும் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் டெல்லி போலீசார் லூக்கை கைது செய்தனர். தற்போது அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையல் லூக் மீது பாலியல் புகார் கூறிய பெண்ணின் நடத்தை பற்றி பெங்களூர் அணியின் உரிமையாளர் விஜய் மல்லையாவின் மகன் சித்தார்த் மல்லையா கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது, தூங்கி எழுந்து பார்த்தால் லூக் பற்றி நூற்றுக்கும் மேற்பட்ட மெசேஜ்கள் வந்துள்ளன. என்ன நடக்கிறது என்றே புரியவில்லை.
30 நிமிடங்கள் கழித்து அவர் செய்த டுவீட்,
லூக் தன்னிடம் தவறாக நடந்ததாகவும், தன்னுடைய வருங்கால கணவரை அடித்ததாகவும் அந்த அமெரிக்க பெண் புகார் கூறியுள்ளார். இது என்ன கூத்து. அந்த பெண் நேற்று இரவு என்னை ஓவராக உரசினார். மேலும் என்னுடன் சாட் செய்ய பிளாக்பெர்ரி போனின் பின் நம்பரை கேட்டார். உண்மையிலேயே அவருடன் வந்தவர் அவரின் வருங்கால கணவர் என்றால் அந்த பெண் இப்படியா நடந்திருப்பார்?.
முதலில் ஷாருக் கான், தற்போது இது. ஏதாவது சர்ச்சையைத் தான் அனைவரும் விரும்புகிறார்கள். கிரிக்கெட்டை மட்டும் ரசிக்கலாமே. நேற்று கெய்ல் சதமடித்ததை அனைவரும் மறந்து விட்டார்களா?
லூக் தவறு செய்திருந்தால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் அந்த பெண் செய்வது முட்டாள்தனம் என்று தெரிவித்துள்ளார்.
சித்தார்த்திடம் ஏன் இவ்வாறு டுவீட் செய்தீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு பதில் அளிக்காமல் கோபப்பட்டு காரில் ஏறிச் சென்றுவி்ட்டார்.
இந்நிலையில் தன் மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானது என்றும், தான் குற்றமற்றவன் என்றும் லூக் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment