புதுமுகங்கள் நடிக்கும் ‘ராட்டினம்’ படத்தின் பிரத்யேக காட்சி இன்று பழம்பெரும் நடிகர்களுக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது. இதில், சினிமாத் துறையைச் சார்ந்த பழம்பெரும் பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி, நடிகர் வி.எஸ்.ராகவன், நடிகை ராஜ சுலோச்சனா, நடிகர் செந்தில் ஆகியோர் பார்த்தனர்.
படம் பார்த்துவிட்டு அவர்கள் கூறுகையில்,
படம் மிகவும் நன்றாக இருந்தது. படத்தின் திரைக்கதையில் வேகமும், விறுவிறுப்பும் கூட்டியிருக்கிறார் இயக்குனர். புதுமுகங்களை வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் யதார்த்தமான கதையை ஆபாசம் இல்லாமல் சொல்லியிருப்பதற்காக இயக்குனருக்கு எங்களது பாராட்டுக்கள்.
இதுபோன்ற தரமான படங்களுக்கு தமிழக அரசு கட்டாயம் வரிவிலக்கு அளிக்க வேண்டும். வரிவிலக்கு அளிக்கும் பட்சத்தில் இதுபோன்ற நல்ல கருத்துக்களைக் கொண்ட திரைப்படங்கள் எடுக்க இயக்குனர்களும், அவர்களுக்கு உறுதுணையாக தயாரிப்பாளர்களும் முன்வருவார்கள்.
இதனால் தமிழக அரசு இப்படத்துக்கு வரி விலக்கு அளித்து தமிழ் சினிமாவை ஊக்குவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்

No comments:
Post a Comment