இலங்கையின் புனித தளமான தம்புள்ளை பகுதியில் வசிக்கும் இஸ்லாமியர்களை, உடனடியாக வெளியேற சொல்லி மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சிங்கள மற்றும் புத்த நாட்டுப் பற்றாளர்கள் என்று குறிப்பிடப்பட்டு அனுப்பபட்டுள்ள மிரட்டல் கடிதத்தில், தம்புள்ளை பகுதியில் வசிக்கும் இஸ்லாமியர்களை கடுமையாக சாடி உடனடியாக அப்பகுதியிலிருந்து வெளியேறுமாறு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பு: இலங்கையில் தம்புள்ளை புனித பிரதேசத்திலிருந்து அங்கு வசித்துவரும் முஸ்லிம்கள் உடனடியாக வெளியேறுமாறு தபால் மூலம் கடிதங்கள் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மூன்று பக்கங்களைக் கொண்ட அந்த கடிதத்தில், அனுப்புபவர் பெயர் குறிப்பிடப்படப்படாமல் சிங்கள, புத்த நாட்டுப்பற்றாளர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
முஸ்லிம்களை ஆவேசமூட்டும் வகையிலும், அவர்களது சகவாழ்வை விமர்சித்தும் அந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் தம்புள்ளை பிரதேச அரசியல்வாதியான அமைச்சர் ஜனக பண்டாரவின் பெயரும் சேர்க்கப்பட்டு, அவர் முஸ்லிம்களுக்கு புத்த தனித்துவத்தை காட்டிக் கொடுத்துள்ளதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment