முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகிறார்கள். சேலம், சென்னை மற்றும் தருமபுரி உள்ளிட்ட 16 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள். வீரபாண்டி ஆறுமுகம் மகன் வீடு மற்றும் உதவியாளர் வீடுகளிலும் சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சேலம் அருகே பூலாவரியில் உள்ள வீடு மற்றும் தொழில் சாலைகளில் இந்த சோதனை நடைபெற்றுவருகிறது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தாக கூறி போலீசார் சோதனை செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. பழிவாங்கும் நோக்கில் இந்த சோதனை நடைபெறுவதாக அரசு மீது திமுகவினர் புகார் கூறியுள்ளனர்.

No comments:
Post a Comment