நித்யானந்தாவை மதுரை இளைய ஆதீனமாக நியமித்ததற்கு காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரர் எதிர்ப்பு தெரிவித்தார். ரஞ்சிதா என்ற பெண் நித்யானந்தா உடனே இருக்கிறார். எனவே அவரை இளைய ஆதீனமாக ஏற்க முடியாது என்று அவர் கூறினார்.
ஜெயேந்திரர் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகை ரஞ்சிதா எழும்பூர் தலைமை மெட்ரோபாலிட்டன் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஜெயேந்திரர் தன்னை அவதூறாக பேசி கொச்சைப்படுத்தியதாகவும் இதனால் மன உளைச்சல் ஏற்பட்டிருப்பதாகவும் எனவே ஜெயேந்திரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டு இருந்தார். இரண்டு தடவை கோர்ட்டில் ஆஜரானார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது மூன்றாவது தடவையாக ரஞ்சிதா கோர்ட்டில் ஆஜரானார். நீதிபதி நசீர் அகமது முன்னிலையில் ஜெயேந்திரருக்கு எதிராக பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.
காலை 11 மணி முதல் பகல் 12.30 மணி வரை அவர் வாக்குமூலம் அளித்தார். அப்போது ரஞ்சிதா கூறியதாவது:-
நான் திரையுலகில் நீண்டகாலமாக இருக்கிறேன். தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன். எனக்கு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். நலிவுற்றோருக்கு பல உதவிகளையும் செய்து வருகிறேன்.
நித்யானந்தா ஆசிரமம் மீது ஏற்பட்ட பற்றின் காரணமாக நித்யானந்தாவின் சீடராக இருக்கிறேன். மதுரை இளைய ஆதீனமாக நித்யானந்தா நியமிக்கப்பட்டது பற்றி கருத்து தெரிவித்த ஜெயேந்திரர், ரஞ்சிதா என்ற பெண் எப்போதும் நித்யானந்தாவுடனேயே இருக்கிறார் என்று கூறி இருக்கிறார். இது அவதூறானது ஆகும். நித்யானந்தாவுடனான உறவை கொச்சைப்படுத்தி உள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன். எனவே ஜெயேந்திரர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்
இவ்வாறு வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
பின்னர் சாட்சிகள் விசாரணை நடந்தது. அதன்பிறகு வழக்கு விசாரணை ஜூன் 6-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. அன்றைய தினம் ஜெயேந்திரருக்கு சம்மன் அனுப்புவது பற்றி முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது.

No comments:
Post a Comment