முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்தார். கடந்த 15 மாதங்களாக ஜெயிலில் இருந்த ஆ.ராசா, நேற்று முன்தினம் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
இதையடுத்து அவர் இன்று பாராளுமன்றத்துக்கு வந்தார். வெள்ளை சட்டையும் கறுப்பு பேண்டும் அணிந்திருந்தார். மீடியா நபர்களை சந்திப்பதை தவிர்த்தார்.
பாராளுமன்றத்துக்கு சென்று கடைசி இருக்கையில் அமர்ந்தார். சிறிது நேரத்துக்கு பிறகு கிளம்பிச் சென்றார். அவரிடம் சில எம்.பி.க்கள் நலம் விசாரித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
No comments:
Post a Comment