ஆருஷி கொலை வழக்கு விசாரணையின் போது பெண் போலீஸ் ஒருவர் தொடர்ந்து சிரித்து கொண்டேஇருந்ததால் நீதிபதி கடும் கோபம் அடைந்து. அவர் மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டார். ஆருஷி கொலை வழக்கு விசாரணை, காஜியாபாத் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் நீதிபதி ஷியாம் லால் முன் விசாரணை நடந்து கொண்டிருந்தது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆருஷி தாய் நுபுரை நீதிமன்றத்தக்கு போலீசார் அழைத்து வந்திருந்தனர். அவருக்கு பாதுகாப்பாக பெண் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் நரேந்திரி தேவி வந்திருந்தார். விசாரணையின் போது நுபுர் அருகே அமர்ந்திருந்த நரேந்திரி தேவி, விசாரணையை கவனிக்காமல் தொடர்ந்து சிரித்து கொண்டே இருந்தார். இதை பார்த்த நீதிபதி ஷியாம் லால் மிகவும் கோபம் அடைந்தார்.
விசாரணை முடிந்தபின், மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளருக்கு நீதிபதி ஷியாம்லால் எழுதிய கடிதத்தில், நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்ட நரேந்திரி தேவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அது பற்றிய விவரத்தை ஒரு வாரத்துக்குள் நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

No comments:
Post a Comment