புதுடெல்லி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கிரிக்கெட் வீரர் லூக் போமர்ஸ் பேச் மயக்கமடைந்தார்.
ஐ.பி.எல். போட்டியில் பெங்களூர் அணி நேற்று டெல்லி அணியை வீழ்த்தியது. வெற்றியால் உற்சாகம் அடைந்த பெங்களூர் அணி வீரர் லூக் போமர்ஸ் பேச் டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்குச் சென்று மதுபானம் அருந்தி மகிழ்ச்சியை கொண்டாடினார்.
அப்போது அங்கு அமெரிக்க வாழ் இந்திய பெண் ஒருவர் தனது காதலனுடன் வந்திருந்தார். அந்த பெண்ணிடம் லூக் போமர்ஸ் பேச் ரகளையில் ஈடுபட்டு மானபங்கம் செய்தாதாக புகார் கூறப்பட்டது. (அந்த வீடியோ)
இதனையடுத்து அவரை கைது செய்த டெல்லி போலீஸார், இன்று டெல்லியிலுள்ள பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். இந்நிலையில் அவர் கோர்ட்டு வளாகத்தில் மயக்கமடைந்தார்.
பின்னர் அவரது வழக்கறிஞர் நீதிபதியிடம் தெரிவித்ததாவது; ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரரான லூக் போமர்ஸ் பேச், அந்த விருந்தின் போது யாரையும் அடிக்கவில்லை. அமெரிக்கப் பெண்ணை மானபங்கமும் செய்யவில்லை என வாதாடினார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி லூக் போமர்ஸ் பேச்சிற்கு ஒருநாள் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் புகார் கொடுத்த பெண்ணின் நடத்தை மீது பெங்களூர் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான சித்தார்த் மல்லையா சந்தேகம் எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவருடைய டுவிட்டர் இணையப்பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது;
'விருந்தில் அந்தப் பெண் நடந்து கொண்ட விதம் சரியானதாகத் தெரியவில்லை. அவர் நேற்று நடந்து கொண்ட விதம் அவருடைய காதலனுக்கு எதிர்கால மனைவியாக இருப்பார் என்பதை உறுதி செய்யவில்லை. அப்பெண் போதையில் என் மீதே சாய்ந்து கிடந்தார்.' என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த அணியின் உரிமையாளரான விஜய் மல்லையா 'லூக் போமர்ஸ்பேச் இனி பெங்களூர் அணியில் விளையாட மாட்டார்'' என்று அறிவித்துள்ளார்.

சிறப்பான பதிவை படைத்தமைக்கு மிக்க நன்றி. தங்களுடைய வலைப்பதிவு(ப்ளாக்) சிறப்பாக இருப்பதால்,
ReplyDeleteதங்களது வலை பதிவை எங்களுது தளத்தில் இடம் பெற நாங்கள் விரும்புகின்றோம் .
சாரல் என்ற பெயரில் எங்களது தளம் உருவாக்கப்பட்டுகொண்டிருகிறது . தங்களது வலை பதிவை எங்களுது தளத்தில் இடம் பெற செய்யுகள்.
தள முகவரி: http://www.saaral.in