விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Tuesday, May 22, 2012

    அத்வானியுடன் ஜெயலலிதா டெலிபோன் பேச்சு: பி.ஏ.சங்மாவுக்கு பா.ஜனதா ஆதரவு?


    ஜனாதிபதி பிரதீபா பாட்டீலின் பதவி காலம் ஜூலை மாதத்துடன் முடிவடைய இருப்பதால் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி சார்பிலோ, முக்கிய எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா சார்பிலோ ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை.
     
    இந்த இரு கட்சிகளுக்குமே ஜனாதிபதி தேர்தலில் தனிப்பட்ட மெஜாரிட்டி இல்லை. கம்யூனிஸ்டுகள், சமாஜ்வாடி, அ.தி.மு.க., தெலுங்கு தேசம், அகாலி தளம், பிஜு ஜனதா தளம் போன்ற கட்சிகள் ஆதரவுடன்தான் காங்கிரஸ் வேட்பாளரோ அல்லது பாரதீய ஜனதா வேட்பாளரோ வெற்றி பெற முடியும்.
     
    காங்கிரஸ் சார்பில் நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி, துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி உள்ளிட்ட சிலரது பெயர்களை பரிசீலித்து வரு கிறது. இது தொடர்பாக தி.மு.க., திரிணாமுல் காங் கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் கருத்தை கேட்டறிந்து வருகிறது.
     
    பாரதீய ஜனதா அப்துல் கலாமை மீண்டும் ஜனாதிபதியாக்கலாம் என்ற முடிவில் இருந்தது. ஆனால் அப்துல் கலாம் தன்னை ஒருமனதாக தேர்ந்து எடுக்க வேண்டும். போட்டியிருந்தால் வேண்டாம் என்று கூறிவிட்டார். அப்துல் கலாம் ஒருமுறை ஜனாதிபதியாக இருந்துவிட்டதால் அவருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்க பாரதீய ஜனதாவில் ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பாரதீய ஜனதாவும் வேட்பாளரை தேர்வு செய்ய முடியாமல் இருந்து வருகிறது.
     
    இந்த நிலையில் பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் பி.ஏ.சங்மா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முன்வந்துள்ளார். இவர் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருக்கிறார். வட கிழக்கு மாநிலமான மேகாலயாவில் முதல்-மந்திரி பதவி வகித்தவர். மலைவாழ் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்.
     
    அவர் கடந்த 15-ந்தேதி சென்னை வந்து முதல்- அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து ஜனாதிபதி தேர்தலில் தனக்கு அ.தி.மு.க. ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அவரது வேண்டுகோளை முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஏற்றுக் கொண்டார். பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவர் இதுவரை ஜனாதிபதி பதவி வகித்ததில்லை. எனவே அவரை ஆதரிப்பதாக அறிவித்ததுடன் அனைத்து அரசியல் கட்சியினரும் ஆதரவு அளிக்குமாறும் வேண்டுகோள் விடுத்தார்.
     
    மேலும் பி.ஏ.சங்மாவுக்கு ஆதரவு திரட்டும் விதமாக நேற்று பாரதீய ஜனதா தலைவர் எல்.கே.அத்வானி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பிரகாஷ் காரத், இந்திய கம்யூனிஸ்ட் ஏ.பி.பரதன், தெலுங்குதேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ், அகாலி தளம் தலைவரும், பஞ்சாப் முதல்- மந்திரியுமான பிரகாஷ்சிங் பாதல் ஆகியோருடன் முதல்-அமைச்சர் ஜெயலலிதா டெலிபோனில் பேசினார்.
     
    அப்போது முன்னாள் சபாநாயகரும், வடகிழக்கு இந்தியாவை சேர்ந்தவரும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவருமான பி.ஏ.சங்மா ஜனாதிபதி ஆவதற்கு முழு தகுதி உள்ளது. எனவே அவருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
     
    ஜெயலலிதாவின் வேண்டுகோள் குறித்து கட்சி தலைவர்கள் பரிசீலித்து வருகிறார்கள். இதில் பாரதீய ஜனதா கட்சி சங்மாவை ஆதரிக்கும் முடிவில் இருப்பதாக தெரிகிறது.
     
    டெலிபோனில் பேசிய ஜெயலலிதாவிடம் அத்வானி பதில் அளிக்கும்போது சாதகமான கருத்தை தெரிவித்தார் என்றும் கட்சியின் மற்ற தலைவர்களுடனும், கூட்டணி தலைவர்களுடனும் ஆலோசனை நடத்தி முடிவு எடுப்பதாக தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
     
    தற்போதைய நிலையில் பாரதீய ஜனதா தனி வேட்பாளரை அறிவித்தால் மற்ற கட்சிகள் ஆதரிக்க முன் வராது. அதே சமயம் காங்கிரஸ் வேட்பாளரை தோற்கடிக்க வேண்டும் என்றால் எதிர்க்கட்சிகளின் வேட்பாளரை ஆதரிக்க வேண்டிய நிலையில் உள்ளது. எனவே பி.ஏ.சங்மாவுக்கு ஆதரவு அளிக்கும் முடிவையே பாரதீய ஜனதா எடுக்கும் என்று கூறப்படுகிறது.
     
    இதுபற்றி அ.தி.மு.க. மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது:-
     
    காங்கிரசும், பாரதீய ஜனதாவும் வேட்பாளரை அறிவிக்காத நிலையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதாதான் அதிகாரப்பூர்வமாக பி.ஏ. சங்மாவை அறிவித்து ஆதரவு அளித்தார்.
     
    தென் இந்திய தலைவர்கள், பிராந்திய மனப்பான்மை கொண்டவர்கள் என்ற கருத்து வடமாநில தலைவர்களிடம் நிலவுகிறது. அந்த எண்ணத்தை மாற்றும் வகையில் வட இந்திய தலைவர் உயர்ந்த இடத்துக்கு வர தென்னிந்திய தலைவரான ஜெயலலிதா ஆதரவு அளித்து இருக்கிறார்.
     
    மேலும் சங்மா கிறிஸ்தவ வேட்பாளர் என்பதால் சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்தவரை ஆதரிக்கும் மனப்பான்மையில் முதல்- அமைச்சர் இருப்பதையும் தெளிவுபடுத்தி உள்ளார். அரசியல் எதிரிகள் ஜெயலலிதா உயர்ந்த சாதிக்காரர் என்ற எண்ணத்தை பரப்பி வருகிறார்கள். அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில்தான் சிறுபான்மை சமுதாயத்துக்கு எதிரானவர் அல்ல என்பதையும் நிரூபித்து இருக்கிறார். முதல் முறையாக பழங்குடியினத்தைச் சேர்ந்தவருக்கு ஆதரவு அளித்து இருப்பதும் வட இந்திய தலைவர்களை யோசிக்க வைத்துள்ளது என்றார்.
     
    முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் இந்த அணுகுமுறையால் பாரதீய ஜனதா மட்டுமின்றி அதன் கூட்டணி கட்சிகளும் சங்மாவுக்கு ஆதரவு அளிக்கும் முடிவை எடுக்கும்.
     
    காங்கிரஸ் வேட்பாளரை இந்த கட்சிகள் ஒருபோதும் ஆதரிக்க முன்வராது என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையே பி.ஏ.சங்மாவுக்கு ஆதரவு அளிக்க ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியும் முன் வந்துள்ளார்.
     
    முலாயம்சிங் யாதவ் தனது கட்சி தலைவர்களுடன் ஆலோசித்து யாருக்கு ஆதரவு என்பதை அறிவிப்பதாக தெரிவித்துள்ளார்.
     
    பி.ஏ.சங்மாவை ஆதரிப்பீர்களா? என்று தேசியவாத காங்கிரஸ் தலைவரும், மத்திய மந்திரியுமான சரத் பவாரிடம் கேட்டபோது, நாங்கள் இப்போது காங்கிரஸ் கூட்டணியில் இருக்கிறோம். சங்மா எங்கள் கட்சி தலைவர் என்றாலும், காங்கிரஸ் எடுக்கும் முடிவை பொறுத்து இதற்கு பதில் சொல்ல முடியும் என்றார்.
     
    லோக் ஜன சக்தி கட்சி தலைவர் ராம்விலாஸ் பஸ்வானிடம் உங்கள் ஆதரவு யாருக்கு என்று கேட்டதற்கு, எல்லோரும் எங்கள் நண்பர்கள்தான். என்றாலும் காங்கிரஸ் தேர்வு செய்யும் வேட்பாளரைத்தான் ஆதரிப்பேன் என்றார்.


    Posted by விழியே பேசு... at 7:57 AM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி

    No comments:

    Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ▼  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ▼  May (561)
      • ஜெகன்மோகன் ரெட்டி கைது! ஆந்திராவில் பலத்த போலீஸ் ...
      • கருணாநிதியை சந்திக்க கோர்ட்டில் அனுமதி கேட்க்கும் ...
      • இன்னொரு ஸ்ரீதேவியாக உருவாவாரா தமன்னா?
      • ஐபிஎல் 5 தொடரில் ஜொலித்த இளம்வீரர்கள்
      • டெங்கு காய்ச்சலில் இருந்து தப்பிப்பது எப்படி? சுகா...
      • காம்பீர் என்னை விட ஆக்ரோஷமான கேப்டன்: டோனி சொல்கிறார்
      • மீண்டும் அசத்த வருகிறார் 'ஆச்சி' மனோரமா!
      • ஆட்டோ கட்டணம் உயர்வால் சைக்கிள் ரிக்ஷாவுக்கு மாறிய...
      • முல்லைப் பெரியாறு அணையில் தமிழக போலீஸை நிறுத்துவோம...
      • பெரம்பூரில் மங்காத்தா நடிகர் குத்திக் கொலை: 3 ஆட்...
      • பாஜகவுக்கு உடம்பு சரியில்லை... ராம் ஜேத்மலானி நக்கல்
      • வெப்சைட்டில் விபசார அழகியாக கோ பட நடிகை காஜல் !
      • நியூட்டன் போட்ட கணக்குக்கு தீர்வு கண்டு இந்திய மாண...
      • இலங்கையில் தமிழர் பகுதியில் ராணுவம் குவிப்பு: இங்க...
      • இலங்கைக்கு விசிட் அடித்த தேமுதிக எம்.எல்ஏ. அருண்பா...
      • பிறந்த நாள் ஸ்பெஷல் : மனோரமா
      • எதிரி விமானங்களை தாக்கும் இந்தியாவின் ஆகாஷ் ஏவுகணை...
      • திருமணம் லேட்டாகுதா? பரிகார பூஜைக்கு அழைத்து செல்க...
      • உல்பா தீவிரவாதிகள் விடுத்த 'பந்த்' அழைப்பை புறக்கண...
      • பாரதீய ஜனதாவில் எடியூரப்பா ஒரு 'மனித வெடிகுண்டு': ...
      • ஐ.பி.எல்.5: ஹாட்ரிக் சாதனை படைக்குமா சென்னை சூப்பர...
      • நக்சல் தலைவர் கைது
      • 15 ஊழல் அமைச்சர்கள் பட்டியலை வெளியிட்டது ஹசாரே குழு!
      • எண்ணெய் நிறுவனங்கள் சேவை நிறுத்தம்: டீசல் இல்லாமல்...
      • பிரபு யார்..? கார்த்திக் யார்..?
      • அமெரிக்காவின் முடிவுக்கு சீனா கண்டனம்
      • பிரஸ்சல்ஸ் ஓபன் டென்னிஸ்: மகளிர் இரட்டையரில் சானிய...
      • முதலிரவுடன் 'விளையாடிய' ஜோசியர்...தூக்கில் தொங்கிய...
      • சன் டிவிக்கு லாபம் தந்த ரஜினி; நஷ்டம் தந்த ஜெயலலிதா!
      • பில்லா 2 இடைவேளையில் வாலை விடும் சிம்பு
      • ராமேசுவரத்தில் பரபரப்பு 500 மீட்டர் தூரத்திற்கு உள...
      • பெட்ரோல் 'குண்டைத்' தொடர்ந்து மக்களை தாக்க ஜூன் ம...
      • புதுக்கோட்டையில் ஆளுக்கு 1000 மில்லி ரம், விஸ்கி, ...
      • தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் இணையுங்கள்: மமதா...
      • தண்டவாளத்தில் ஏறும் தமிழக ஐ.டி. அமைச்சரின் வண்டவாளம்
      • மக்கள் எங்களிடம் ஒப்படைத்துள்ள பொறுப்பை நாங்கள் உண...
      • பாலியல் புகாரில் சிக்கினால் ஆசிரியர்கள் இனி டிஸ்மி...
      • காதலன் ராஜேஷ் உடன் ஜோடியாக நடிக்கிறார் மீரா ஜாஸ்மின்
      • புதிய பாதை' படம் மீண்டும் தயாராகிறது! பார்த்திபன் ...
      • அப்பாவாக இருந்து மகளை எப்படி ரசிக்க முடியும்! ஸ்ரு...
      • 'பஞ்சதந்திரம்-2' எடுக்கும் ரவிக்குமார், கமல்: சிம்...
      • ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி: ரிசர்வ் வங்கி கவர...
      • காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு: விரைவில் மின்வெ...
      • சென்னை சூப்பர் கிங்ஸ் பைனலில் நுழைந்தது... விசில் ...
      • நரேந்திர மோடிக்கும் சஞ்சய் ஜோஷிக்கும் என்னதான் பிர...
      • பொருளாதார நெருக்கடியில் இருந்து இந்தியா விரைவில் ம...
      • புதுக்கோட்டை: அதிமுக வேட்பாளரை எதிர்க்கும் அதிமுக ...
      • 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு: எஸ்ஸார் மற்றும் லூப் நிறுவ...
      • ஆண்களை தகுதியில்லாதவர்களாக நினைக்கிறார் ஜெ: அன்புமணி
      • பெட்ரோல் விலை உயர்வு எதிரொலி: மாநிலங்களில் பந்த் அ...
      • அடுத்த சாவித்ரி.. எஸ்.ஜே.சூர்யாவின் அடுத்த 'கீரோயி...
      • மதுரை ஆட்சியர், எஸ்.பி. மாற்றத்தின் பின்னணி என்ன?
      • விஜய்க்கு என்ன 17 வயசா? பிரபுதேவாவை கேட்ட அக்ஷய் க...
      • உதயகுமார் கேள்விகளுக்கு இந்திய அணுமின்கழகம் பதில்
      • நடிகர் திலீப் மாரடைப்பால் மரணம்
      • தாண்டவம் எனக்கு இன்னொரு மங்காத்தா: லக்ஷ்மி ராய்
      • ஆப்கானிஸ்தானில் பள்ளி மாணவிகள் மீது தீவிரவாதிகள் வ...
      • கார்த்திக்கு வயசு 35: தலைவர்கள் ரேஞ்சில் பிறந்தநாள...
      • மானபங்க விவகாரம்: கிரிக்கெட் வீரருக்கு எதிரான வழக்...
      • தன்னைத் தானே எதிர்த்து 30-ம் தேதி திமுக போராட்டம்!
      • முதுநிலை ஆசிரியர்களுக்கான 2800 காலி இடங்களுக்கு நா...
      • பெட்ரோல் விலை உயர்வில் தி.மு.க.வுக்கு பங்கு உண்டு:...
      • ஆருஷியை கொன்றது பெற்றோரே: நீதிமன்றத்தில் சி.பி.ஐ வ...
      • மும்பைத் தாக்குதலில் உண்மை குற்றவாளிகள் விசாரிக்கப...
      • ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுவதில் 3 ஆயிரம் பேருக்...
      • பிரதமர் பதவிக்கு நரேந்திரமோடி தகுதியானவர்: எடியூரப்பா
      • குடியரசுத்தலைவர் பிரதீபா பாட்டீலின் மாளிகையில் திர...
      • அடங்கொப்புரானே... கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு...
      • விவேகானந்தரும், நித்தியானந்தாவும் ஒன்று :டிராபிக் ...
      • பெட்ரோல் விலை குறைக்கப்படமாட்டாது: இந்தியன் ஆயில் ...
      • ஷங்கரின் நாயகியான அசின்!
      • ஜூனியர் ஆட்டிஸ்டுகளை விபச்சாரத்தி்ல் தள்ளிய 'கோலங்...
      • பிளஸ் டூ தேர்வு எழுதிய மகள் பாஸ், தந்தை ஃபெயில்
      • பெட்ரோல் விலை ரூ. 7.50 உயர்வு: மக்கள் ஏமாந்தவர்களா...
      • புதுக்கோட்டை தேர்தலில் போட்டியிடக் கூடாது...ரஜினி ...
      • பெட்ரோலைத் தொடர்ந்து டீசல்- சமையல் கேஸ் விலையும் உ...
      • மும்பையில் நடைபெற்ற ஜனாதிபதியின் கப்பல்படை ஆய்வுக்...
      • பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் ...
      • என்னைக் கொல்ல மாவோயிஸ்டுகள், மார்க்சிஸ்டுகள், 6 நா...
      • என் தந்தையால் என் உயிருக்கு ஆபத்து: பிசிசிஐ தலைவர்...
      • ராமஜெயம் ஸ்டைலில் இன்னொரு கொலை
      • புதுமணத்தம்பதியர் தூக்குப்போட்டு தற்கொலை: திருமணமா...
      • வெளிநாட்டுப் பெண் என்று கூறியதற்காக சோனியா என்னை ம...
      • பீகாரில் முதல்-மந்திரி யாத்திரையில் சென்ற வாகனங்கள...
      • ஏழைகள் விடும் கண்ணீர் மத்திய அரசை அழித்து விடும்-ஜ...
      • ஐ.பி.எல். பிளே ஆப் சுற்று போட்டி: சென்னை சூப்பர் க...
      • பின்லேடனை காட்டிக் கொடுத்த பாக். டாக்டருக்கு 33 ஆண...
      • இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே ...
      • மத்தியில் அரசு செயல்படுதா? என்று மக்கள் கேட்கின்றன...
      • ஜனாதிபதி தேர்தல்: காங்கிரசுக்கு முலாயம்சிங் ஆதரவு
      • இறுதிப் போரில் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கூறுவது ம...
      • ஐ.பி.எல்.போட்டிகளில் சூதாட்டம்: புனே அணியின் அலுவல...
      • ஐ.பிஎல்.5: பைனலில் சென்னை சூப்பர் கிங்ஸ் : ஐ.பி.எ...
      • முன்னாள் வீரர்களுக்கு ஊக்கத்தொகை: கபில்தேவ், அசார...
      • கேரளாவில் வசிப்பதற்கே பயமாக உள்ளது: மோகன்லால் அச்சம்
      • ஹஜ் பயண மானியம் ரத்தா? அமைச்சர் கிருஷ்ணா பதில்
      • பிரதமர் அளித்த விருந்தில் முதல் வரிசையில் இடம் பிட...
      • அமெரிக்க பாகிஸ்தானிடம் மன்னிப்பு கோருவதற்கு தைரியம...
      • ஜேம்ஸ்பாண்டின் புதியபடமான 'ஸ்கை பால்' டிரெய்லர் வெ...
      • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அபார பந்துவீச்சு-டெல்லி டேர...
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ►  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.