இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது தரக் கூடாது என்று இந்திய பிரஸ் கவுன்சில் தலைவரான நீதிபதி கட்ஜூ கருத்துத் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் கவிஞர் நஸ்ரூல் இஸ்லாமின் மருமகள் கல்யாணி காஸிக்கு காளிதாஸ் காலிப் சம்மான் விருதை வழங்கி அவர் பேசியதாவது:
திரை உலக நட்சத்திரங்கள், கிரிக்கெட் வீரர்கள் போன்றவர்களுக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா வழங்க வேண்டும் என்று வலியுறுத்துவது நமது கலாசாரத்தின் தன்மையை குறைத்துக் காட்டுகிறது.
பாரதியார், சரத் சந்திர சட்டோபாத்யாய போன்றவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கவேண்டும். அதைவிடுத்து சச்சினுக்கு கொடுங்கள்..கங்குலிக்கு கொடுங்கள் என்று கூறக் கூடாது. அம்பேத்கருக்கு அவர் மறைவுக்குப் பிறகுதான் பாரத ரத்னா விருது கொடுக்கப்பட்டது. ஆனால் கவிஞர் காஸி நஸ்ரூல் இஸ்லாமுக்கு பாரத ரத்னா விருது கொடுக்கப்படவில்லை.
இந்தியாவின் சிறப்பம்சங்களை நஸ்ரூல் இஸ்லாமின் கவிதைகள் பிரதிபலிக்கின்றன. அவர் நிறைய உருது கவிஞர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தினார். அவரது கவிதைகளை இந்தியில் மொழி பெயர்க்காதது வருத்தமளிக்கிறது. மேற்கு வங்கத்திற்கு வெளியே உள்ள மக்களால் அதை எவ்வாறு தெரிந்து கொள்ள முடியும். அதை மொழிபெயர்க்க உதவுமாறு முதல்வர் மம்தா பானர்ஜியிடம் கேட்டுள்ளேன் என்றார்.
No comments:
Post a Comment