ரஞ்சிதா தன் மீது தொடர்ந்துள்ள வழக்கை வாபஸ் பெறுமாறு தான் யாரையும் தூதுவிடவில்லை என்று காஞ்சி ஜெயேந்திரர் தெரிவித்துள்ளார்.
நித்யானந்தா மதுரை இளைய ஆதீனமாக பொறுப்பு ஏற்றதற்கு காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரர் எதிர்ப்பு தெரிவித்தார்.
ரஞ்சிதா என்ற பெண்ணை எப்போதும் பக்கத்தில் வைத்துக் கொண்டு சுற்றும் நித்யானந்தாவுக்கு ஆதீனம் பட்டம் வழங்கியதை ஏற்க முடியாது என்று ஜெயேந்திரர் கமெண்ட் அடித்தார். இதற்கு நித்யானந்தா எதிர்ப்பு தெரிவித்தார். தனக்கு எதிரான கருத்தை பத்து நாட்களில் ஜெயேந்திரர் வாபஸ் பெறவேண்டும் என்றும் கெடு விதித்தார்.
ரஞ்சிதாவும் ஜெயேந்திரர் கருத்தை கண்டித்து எழும்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். மனுவில் அவர் ஜெயேந்திரர் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவுகளான 499 மற்றும் 500-ன் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் வரும் 16ம் தேதி அதாவது நாளை ஜெயேந்திரர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் நித்யானந்தா பற்றி கூறிய கருத்தை ஜெயேந்திரர் வாபஸ் பெற்றுவி்ட்டார் என்று செய்திகள் வெளியாகின. ஏன் நி்த்யானந்தாவும், மதுரை ஆதீனமும் கூட ஜெயேந்திரர் தனது கருத்தை வாபஸ் பெற்றுள்ளதாகவும், அவரது தூதுவர்கள் இன்று நித்யானந்தாவை சந்திப்பதாகவும் தெரிவித்தனர். இதற்கிடையே வழக்கு வேண்டாம் என்று ஜெயேந்திரர் ரஞ்சிதாவுக்கு தூதுவிட்டதாக ரஞ்சிதா நேற்று தெரிவி்த்தார்.
இது குறித்து மீனாட்சியின் பிள்ளைகள் என்ற அமைப்பு ஜெயேந்திரருடன் ஆலோசனை நடத்தியது. அப்போது தான் நித்யானந்தா பற்றி தெரிவித்த கருத்தை வாபஸ் பெறப்போவதில்லை என்று ஜெயேந்திரர் உறுதியளித்துள்ளார்.
No comments:
Post a Comment