கடந்த வாரம் முழுக்க அமர்க்களப்பட்டு வந்த சினேகா - பிரசன்னா திருமண கொண்டாட்டங்கள் முடிவுக்கு வந்துவிட்டன.
ஏற்கெனவே இருவரும் முடிவு செய்தபடி, இப்போதைக்கு கொஞ்ச நாள் இருவரும் தனிக்குடித்தனம் இருக்கப் போகிறார்களாம். பின்னர் பிரசன்னா குடும்பத்தினருடன் சேர்ந்து வசிக்க திட்டமிட்டுள்ளார்களாம்.
ஹனிமூனுக்கு வெளிநாடு பறக்கும் திட்டம் இருந்தாலும், அது இப்போதைக்கில்லையாம். காரணம்?
ஏற்கெனவே சினேகாவும் பிரசன்னாவும் ஒப்புக் கொண்ட படங்கள். இந்தப் படங்களை முடித்துக் கொடுத்துவிட்டுத்தான் ஹனிமூன் செல்லவிருக்கிறார்களாம்.
இதில் ஜிஎன்ஆர் குமாரவேல் இயக்கும் ஹரிதாஸ் முக்கியமான படம். இந்தப் படத்தின் ஷூட்டிங் சென்னையில் விரைவில் தொடங்குகிறது. இதில் முடித்த பிறகுதான் தேனிலவுப் பயணத்தை வைத்துக் கொள்ளலாம் என சினேகா கூற, மறுபேச்சின்றி ஒப்புக் கொண்டாராம் பிரசன்னா!
கையில் உள்ள படங்களை முடித்துக் கொண்ட பிறகு, தொடர்ந்து நடிப்பதா வேண்டாமா என்பதையும் சினேகா முடிவுக்கே விட்டுவிட்டாராம் பிரசன்னா!
No comments:
Post a Comment