சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) 20 ஓவர் போட்டிக்கான அடிப்படையில் நாடுகளின் தரவரிசைப் பட்டியல் வெளியிட்டுள்ளது. அதன்படி ஆஸ்திரேலியாவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டு 20 ஓவர் போட்டியிலும் தோற்றதால் ஆஸ்திரேலியா 9-வது இடத்தில் இருந்து 10-வது இடத்துக்கு பின்தங்கி உள்ளது. அந்த அணி 85 புள்ளிகளுடன் உள்ளது. அயர்லாந்து அணியைவிட ஆஸ்திரேலியா ஒரு இடத்துக்கு பின்தங்கி உள்ளது. அயர்லாந்து 88 புள்ளிகளுடன் 9-வது இடத்தில் உள்ளது.
தென் ஆப்பிரிக்கா 130 புள்ளிகளுடன் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. இங்கிலாந்து 2-வது இடத்திலும், இலங்கை 3-வது இடத்திலும், பாகிஸ்தான் 4-வது இடத்திலும், இந்தியா 5-வது இடத்திலும் உள்ளன. வெஸ்ட் இண்டீஸ் 6-வது இடத்திலும், நியூசிலாந்து 7-வது இடத்திலும், வங்காள தேசம் 8-வது இடத்திலும் உள்ளன.
இதற்கிடையே இந்த தர வரிசை நிர்ணயித்ததை ஆஸ்திரேலிய 20 ஓவர் போட்டி கேப்டன் பெய்லி விமர்சித்து உள்ளார்.

No comments:
Post a Comment