டீசல் விலை உயர்வு, சமையல் கியாஸ் சிலிண்டர் வினியோகத்துக்கு கட்டுப்பாடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடெங்கும் நாளை (வியாழன்) முழு அடைப்புப் போராட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன. பாரதீய ஜனதா, இடது சாரிகள், சமாஜ்வாடி உள்பட பல்வேறு கட்சிகள் இந்த முழு அடைப்பை முன் நின்று நடத்துகின்றன. இதன் காரணமாக வட மாநிலங்களில் முழு அடைப்புப் போராட்டம் முழுமையாக நடைபெறும்.
தமிழ்நாட்டில் நாளை முழு அடைப்புப் போராட்டம் நடத்த தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க., விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த கட்சிகளின் தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் நாளை எந்த பணிகளிலும் ஈடுபட மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. என்றாலும் தமிழ்நாட்டில் மக்களின் இயல்பு வாழ்க்கையில் எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அரசு அலுவலகங்கள், பள்ளிக்கூடங்கள் வழக்கம் போல செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் நாளை பஸ்கள், ரெயில்கள் வழக்கம் போல ஓடும் என்று போக்குவரத்து துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பயணிகள் எந்த விதத்திலும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வாகனப் போக்குவரத்துக்கு முழுமையான பாதுகாப்பு அளிக்கப்படும் என்று போலீசார் அறிவித்துள்ளனர். வாகனப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
நாளை முழு அடைப்புப் போராட்டம் நடைபெறுவதை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மக்கள் அதிகம் கூடும் பஸ் நிறுத்தங்கள், சந்தைகள், வழிபாட்டுத் தலங்களில் கூடுதல் போலீசாரை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தவிர போலீசார் ரோந்து சுற்றி வந்து கண்காணிப்பு மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.
நாளை பஸ், ரெயில் ஓடினாலும் லாரிகள், ஆட்டோக்கள் ஓடாது. கடைகள், கோயம்பேடு மார்க்கெட் அடைக்கப்படும் என்று வியாபார சங்கங்கள் அறிவித்துள்ளன. எனவே அதற்கேற்ப பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள போலீசார் முடிவு செய்துள்ளனர்.

No comments:
Post a Comment