மத்திய அரசு டீசல் விலையை லிட்டருக்கு ரூ.5 உயர்த்தியது. கியாஸ் சிலிண்டருக்கும் கட்டுப்பாடு விதித்துள்ளது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு உருவான நிலையில் சில்லரை வணிகத்தில் நேரடி அன்னிய முதலீட்டுக்கும், மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
முடிவை கைவிடக்கோரி மத்திய அரசுக்கு 72 மணி நேர கெடு விதிக்கப்பட்டது. இந்த கெடு இன்றுடன் முடிவடைகிறது. மத்திய அரசு விலை உயர்வு மற்றும் அன்னிய முதலீடு அனுமதி முடிவை கைவிடாவிட்டால் திரிணாமுல் காங்கிரஸ் மந்திரிகள் ராஜினாமா செய்துவிட்டு வெளியில் இருந்து ஆதரவு அளிக்கும் முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இதுபற்றி திரிணாமுல் காங்கிரஸ் வட்டாரத்தில் கேட்டபோது இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. கெடு முடியும் வரை காத்திருப்போம் என்று தெரிவிக்கப்பட்டது. நாளை திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம் கொல்கத்தாவில் முதல்- மந்திரி மம்தா பானர்ஜி தலைமையில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தருவதா? அல்லது கூட்டணியை விட்டு வெளியேறுவதா என்பது பற்றி முடிவு எடுக்கப்படும்.
மத்திய அரசு ஒவ்வொரு முறையும் இது போன்று விலை உயர்வு அறிவிக்கும் போது மம்தா பானர்ஜி ஆதரவு வாபஸ் மிரட்டல் விடுப்பார். பின்னர் பணிந்து போய் விடுவார். அதுபோல்தான் நாளைய முடிவும் இருக்குமா? அல்லது அதிரடி முடிவு எடுப்பாரா? என்று பரபரப்புடன் எதிர் பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே திரிணாமுல் காங்கிரசை சமரசப்படுத்தும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. உயர்த்தப்பட்ட டீசல் விலையில் சிறிதளவு குறைக்க மத்திய அரசு முன்வரும் என்று காங்கிரஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
மம்தா பானர்ஜியை சமாதானப்படுத்தும் வகையில் மத்திய அரசு முடிவு எடுக்குமா? அல்லது மம்தா பானர்ஜியின் மிரட்டலை சந்திக்குமா என்பது நாளை தெரிந்து விடும்.

No comments:
Post a Comment