கோவாவில் சட்டவிரோத இரும்புத்தாது மற்றும் மக்னீசியம் தாது சுரங்கங்கள் தொடர்பாக நீதிபதி ஷா தலைமையிலான கமிஷன் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் சட்டவிரோத சுரங்கங்களின் லைசென்ஸ்களை அரசு ரத்து செய்தது. மேலும் இதுதொடர்பாக சுரங்கம் மற்றும் புவியல் துறை மூத்த அதிகாரிகள் 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்களில் கோவா சுரங்கத்துறை மூத்த அதிகாரியான தத்தாச்சார்யா பாவே இன்று பாண்டா நகரில் உள்ள தனது இல்லத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.
சஸ்பெண்ட் செய்யப்பட்டபிறகு, அவருக்கு மூத்த அதிகாரிகள் தொடர்ந்து டார்ச்சர் கொடுத்து வந்ததால் தற்கொலை செய்ததாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டினர்.
இதுபற்றி சப்-கலெக்டர் விசாரணை நடத்த வேண்டும் என்று முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment