மத்திய அரசு அறிவித்த
டீசல் விலை உயர்வு, சிலிண்டருக்கு விநியோகத்தில்
புதிய கட்டுப்பாடு, சில்லரை வர்த்தகத்தில்
அன்னிய முதலீட்டுக்கு அனுமதி ஆகியவற்றை கண்டித்து எதிர்கட்சிகள் சார்பாக இன்று நாடு
தழுவிய பந்த் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் நாடு முழுவதும் இயல்வு வாழ்க்கை பெருமளவு
பாதிக்கப்பட்டுள்ளது.
டீசல் விலையில் லிட்டருக்கு
ரூ.5 உயர்த்தியும், வீட்டு உபயோகத்திற்கு
ஆண்டிற்கு 6 சிலிண்டர்களுக்கு மட்டுமே மானியம் வழங்கப்படும், சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி
என்று மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது. இந்த அறிவிப்பை எதிர்த்து எதிர்கட்சிகள் கண்டனம்
தெரிவித்தன,
மேலும் நாட்டின் முக்கிய
எதிர்கட்சியான பாஜக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் நாளை நாடு தழுவிய பாரத் பந்த்திற்கு
அழைப்பு விடுத்துள்ளன. இதற்கு தமிழகத்தை சேர்ந்த திமுக. பாமக, மதிமுக ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும்
வணிக அமைப்புகள், தொழிற்சங்கங்கள்
ஆகியவை பந்த்திற்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளன.
இதைத் தொடர்ந்து இன்று
காலை முதல் நாடு தழுவிய முழு அடைப்பு நடைபெற்று வருகிறது. உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி
கட்சியினரும் பாரதிய ஜனதா கட்சியினரும் ரயில் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதுவரை
பெரிய அளவிலான வன்முறை சம்பவங்கள் ஏதுமின்றி அமைதியாக முழு அடைப்பு நடைபெற்று வருகிறது
தமிழகத்தில் பெரும்பாலான
கடைகள் மூடப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
ரத்து செய்யப்பட்டதால் பெரும்பாலான கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் ஆட்டோக்கள்
முழுவதும் இயக்கப்படவில்லை. தமிழகம் முழுவதும் பாதியளவு பேருந்துகளே இயக்கப்படுகின்றன.
தமிழகத்தில் லாரிகள் முழுவதும் இயக்கப்படவில்லை. தொழில்நகரமான திருப்பூரில் அனைத்து
தொழிற்சாலைகளும் மூடப்பட்டுள்ளன.
தமிழகத்தின் அண்டை
மாநிலங்களான கர்நாடகா, கேரளாவில் முழு அளவிலான
பந்த் நடந்து வருகிறது.
My Friends, I Publish Blogger Template In My Website, Plz Visit.
ReplyDelete