கிரானைட் ஊழல் குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஏன் வாய் திறக்கவில்லை என்று லட்சிய திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் டி. ராஜேந்தர் கேள்வி எழுப்பியுள்ளார்.
லட்சிய திராவிடக் கழகம் சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே நடந்தது.
கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் தலைவர் டி.ராஜேந்தர் பேசியதாவது,
1970ம் ஆண்டுக்குப் பிறகு தமிழகத்தில் ஒரு தலைமுறையே மதுவுக்கு அடிமையாகிவிட்டது. பள்ளி மாணவர்கள் மது அருந்துவது கவலை அளிப்பதாக உள்ளது. மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று பலர் வலியுறுத்தியும் அரசு இந்த விஷயத்தில் ஏன் தயக்கம் காட்டுகிறது என்றே புரியவில்லை.
மதுவிலக்கை அமல்படுத்தும் கட்சிக்கு பெண்கள் நிச்சயம் வாக்களிப்பார்கள். லதிமுகவும் அந்த கட்சிக்கு ஆதரவளிக்கும். காங்கிரஸ் ஆட்சி ஊழல் ஆட்சியாக உள்ளது. மேலும் அந்த அரசு மக்களைப் பற்றி கவலைப்படுவது இல்லை. வரும் மக்களவைத் தேர்தலில் லதிமுக காங்கிரஸுக்கு எதிராக பிரச்சாரம் செய்யும். கிரானைட் ஊழல் குறித்து விஜயகாந்த் ஏன் வாயே திறக்கவில்லை. மக்கள் அவருக்கு அளித்த வாய்ப்பை அவர் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றார்.
No comments:
Post a Comment