சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) 20 ஓவர் சர்வதேச போட்டி வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் 55 பந்துகளில் 91 ரன்கள் குவித்த நியூசிலாந்தின் பிரன்டன் மெக்கல்லம், பேட்டிங் வரிசையில் 793 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெய்ல் (744 புள்ளி) 2-வது இடத்திலும், இந்தியாவின் சுரேஷ் ரெய்னா (742 புள்ளி) 3-வது இடத்திலும், ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் (738 புள்ளி) 4-வது இடத்திலும் உள்ளனர்.
புற்றுநோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து, நியூசிலாந்துடனான ஆட்டத்தில் 26 பந்துகளில் 34 ரன்கள் விளாசிய யுவராஜ்சிங் மீண்டும் தரவரிசைக்கு திரும்பியுள்ளார். அவருக்கு 15-வது இடம் கிடைத்துள்ளது. இதுவரை முதலிடத்தில் இருந்த இங்கிலாந்தின் மோர்கன் 9-வது இடத்திற்கு சரிந்துள்ளார்.
பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் பாகிஸ்தானின் சயீத் அஜ்மல் முதலிடத்தை பிடித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் தொடரில் 6 விக்கெட்டுகள் வீழ்த்தியதால் இங்கிலாந்தின் ஸ்வானை 2-வது இடத்திற்கு தள்ளிட்டு நம்பர் ஒன் அரியணையில் ஏறியுள்ளார். டாப்-20 பவுலர்களில் இந்தியர்கள் யாரும் இடம்பெறவில்லை.
No comments:
Post a Comment