கூடங்குளம் அணு உலைக்கு
எதிர்ப்புத் தெரிவித்து தூத்துக்குடி துறைமுகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை மீனவர்கள்
இன்று நடத்துகின்றனர்.
கூடங்குளம் அணு உலைக்கு
எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடி துறைமுகம் இன்று முற்றுகையிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து இன்று காலை 9 மணியளவில் 300க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் மூலம்
தூத்துக்குடி துறைமுகம் நோக்கி கடல்வழியே மீனவர்கள் பயணம் மேற்கொண்டனர். தூத்துக்குடி
சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
மீனவர்களின் கடல்வழிப்
போராட்டத்தைத் தொடர்ந்து கடலோர காவல்படையின் கண்காணிப்பு விமானம் வானில் பறந்தபடியே
கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இன்றைய துறைமுகம்
முற்றுகைப் போராட்டத்தைத் தொடர்ந்து 25-ந் தேதியன்று மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு
மாநிலம் தழுவிய அளவில் முற்றுகைப் போராட்டம் நடைபெற உள்ளது.
இதனிடையே துறைமுக
முற்றுகைப் போராட்டத்தைக் கைவிடுமாறும் இந்தப் போராட்டத்தை தடுத்து நிறுத்துமாறும்
மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கேட்டுக் கொண்டுள்ளார்.
No comments:
Post a Comment