இந்தியாவை சேர்ந்த முன்னணி டென்னிஸ் வீரர்கள் மகேஷ்பூபதி, ரோகன் போபண்ணா. இருவரும் சமீபத்தில் லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் லியாண்டர் பெயசுடன் இணைந்து இரட்டையர் போட்டியில் விளையாட மறுத்தனர்.
முதலில் மகேஷ் பூபதியும், அவரை தொடர்ந்து போபண்ணாவும் இந்த முடிவை அறிவித்தனர். இதனால் அரசியல் நிர்பந்தம் காரணமாக அகில இந்திய டென்னிஸ் சங்கம் 2 அணிகள் ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதற்கு எந்த பலனும் இல்லை.
ஒலிம்பிக்கில் டென்னிசில் ஒரு பதக்கம்கூட பெறவில்லை. வீரர்களுக்குள் இருந்த பனிப்போரை ஒலிம்பிக் தோல்விக்கு காரணம். ஒலிம்பிக் தோல்வியால் அகில இந்திய டென்னிஸ் சங்கம் அதிர்ச்சி அடைந்தது. மகேஷ் பூபதி, ரோகன் போபண்ணா மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது. இருவரையும் அணியில் சேர்க்கவில்லை.
தற்போது நியூசிலாந்துக்கு எதிரான டேவிஸ் கோப்பை போட்டியில் இருவரும் அணியில் சேர்க்கப்படவில்லை. இந்த நிலையில் மகேஷ் பூபதி, போபண்ணா ஆகியோர் மீதான தடையை மேலும் 2 ஆண்டுக்கு நீட்டித்து அகில இந்திய டென்னிஸ் சங்கம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. 2014-ம் ஆண்டு ஜூன் 30-ந்தேதி வரை அவர்கள் மீதான தடை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அகில இந்திய டென்னிஸ் சங்கத்தின் இந்த முடிவால் மகேஷ் பூபதி கோபம் அடைந்து உள்ளார். டுவிட்டரில் அவர் கூறும்போது, டென்னிஸ் பற்றி தெரியாத வயதானவர்கள்தான் நிர்வாகிகளாக இருக்கிறார்கள். எனது பதில் என்ன என்பதை விரைவில் தெரிவிப்பேன் என்றார்.

No comments:
Post a Comment