இலங்கையின் யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியாவின் கிழக்குக் கடலோர கடற்படை தளமான விசாகப்பட்டினத்தை இலக்கு வைத்து பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ கண்காணிப்பு நிலையம் அமைக்க மகிந்த ராஜபக்சே அனுமதி கொடுத்திருக்கிறார்.
மத்திய அரசுக்கு அண்மையில் வெளிநாட்டுக்க்கான உளவு அமைப்பான "ரோ" அமைப்பு அனுப்பிய சுறறிக்கையில், யாழ்ப்பாணத்தில் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ.யின் செயல்பாடுகள் அதிகரித்திருப்பதாக எச்சரித்திருக்கிறது.
இந்தியாவின் மிகப் பெரிய கடற்படை தளமான அந்தமான் தீவுகளை ஏற்கெனவே பர்மாவின் கொக்கோ தீவில் இருந்தும் வங்கதேசத்தின் சிட்டகாங்க் துறைமுகத்தில் இருந்தும் சீனா கண்காணித்து வருகிறது.
வங்கக் கடலில் இந்தியா அமைத்திருக்கும் மற்றொரு முக்கிய கடற்படை தளம் விசாகப்பட்டினம். இங்குதான் இந்தியாவின் நீர்மூழ்கிக் கப்பல்கள், அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் நடமாட்ட்ம் அதிகம். தற்போது யாழ்ப்பாணத்தில் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. அமைக்கும் கண்காணிப்பு நிலையம் இந்த விசாகப்பட்டினம் கடற்படை தளத்தை இலக்கு வைத்திருக்கிறது, இந்த நிலையத்தில் இருந்து இந்திய கடற்படையினரின் தகவல் பரிமாற்றத்தை இடைமறித்து ஒட்டுக் கேட்கவும் முடியுமாம்.
டெல்லியில் நேற்று முன் தினம் இந்த விவகாரம் தொடர்பாக தேசிய பாதுகாப்புத் துறை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக இலங்கை அரசை இந்தியா எச்சரிக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment