20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கையில் வருகிற நாளை முதல் அக்டோபர் 7-ந்தேதி வரை நடக்கிறது. 2007-ம் ஆண்டு சாம்பியனான இந்திய அணி ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இந்திய அணி 19-ந்தேதி ஆப்கானிஸ்தானையும், 23-ந்தேதி இங்கிலாந்தையும் எதிர்கொள்கிறது. இந்தப்போட்டிகளுக்கு முன்னதாக இந்திய அணி பயிற்சி ஆட்டங்களில் விளையாடி வருகிறது. முதல் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 26 ரன்னில் இலங்கையை தோற்கடித்தது.
இந்நிலையில் இந்திய அணி தனது 2-வது மற்றும் கடைசி பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் மோதி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கிய சேவாக் 26 ரன்னும், காம்பீர் 10 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். அதன்பின்னர் ஜோடி சேர்ந்த கோலியும், ரோகித் ஷர்மாவும் நேர்த்தியாகவும், அதிரடியாகவும் ஆடி ஸ்கோரை உயர்த்தினர். ரோகித் 6 பவுண்டரி மற்றும் 2 சிக்சர்களுடன் 56 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்தது. கோலி 7 பவுண்டரி மற்றும் 2 சிக்சருடன் 75 ரன்னுடனும், யுவராஜ் 4 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். பாகிஸ்தான் தரப்பில் அஜ்மல் 2 விக்கெட்டும், குல் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் 186 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடிய பாகிஸ்தான் அணியின் கேப்டன் ஹபீஸ் 38 ரன்கள் எடுத்தார். அவருக்குப் பின்னர் சில வீரர்கள் சரியாக ஆடாததால் இந்தியா எளிதாக வென்றுவிடும் போல இருந்தது. ஒருகட்டத்தில் பாகிஸ்தான் அணி 91 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது. அதன்பின்னர் ஜோடி சேர்ந்த கம்ரான் அக்மலும், சோயிப் மாலிக்கும் அதிரடியாக ஆடி இந்திய பந்துவீச்சை துவம்சம் செய்தனர்.
இதனால் பாகிஸ்தான் அணி 19.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்து அபாரமாக வெற்றிபெற்றது. கம்ரான் அக்மல் 92 ரன்னுடனும், சோயிப் மாலிக் 37 ரன்னுடனும் களத்தில் இருந்தார். இந்திய தரப்பில் அஷ்வின் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆனால் அஷ்வின் தவிர ஜாகீர் கான், பாலாஜி, பதான், ஹர்பஜன் உள்ளிட்ட இந்திய வீரர்களின் பந்துவீச்சு சுத்தமாக எடுபடாமல் போனது.

Super
ReplyDelete