ஜப்பான் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடந்து வருகிறது. இதன் 2-வது நாளான நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டத்தில் உலகின் 29-ம் நிலை வீரர் அஜய் ஜெயராம் (இந்தியா) 21-14, 21-14 என்ற நேர்செட்டில் சிங்கப்பூர் வீரர் ஜி லியாங் டெரக்கை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை சிந்து 21-18, 17-21, 21-13 என்ற செட் கணக்கில் ஜப்பான் வீராங்கனை காரி இமாபெப்பை வீழ்த்தி 2-வது சுற்றுக்குள் நுழைந்தார். இந்த வெற்றியை பெற அவருக்கு 57 நிமிடம் தேவைப்பட்டது.
இந்திய வீரர்கள் காஷ்யாப், குருசாய்துத், சாய் பிரனீத் ஆகியோர் முதல் சுற்றில் தோல்வி கண்டு வெளியேறினார்கள்.

No comments:
Post a Comment