சசிகுமார் ஜோடியாக
சுந்தர பாண்டியன் படத்தில் அறிமுகமானவர் லட்சுமி மேனன். கும்கி படத்திலும் தற்போது
நடித்து வருகிறார். இதில் கதாநாயகனாக பிரபு மகன் விக்ரம் பிரபு நடிக்கிறார். பிரபு
சாலமன் இயக்குகிறார்.
லட்சுமி மேனனின் இடது
கன்னத்தில் தழும்பு உள்ளது. அதனை அகற்ற முகத்தில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து
கொள்ளப்போவதாக தகவல் வெளியானது.
இதுபற்றி கேட்டபோது
லட்சுமி மேனன் கூறியதாவது:-
சிறு வயதில் என் கன்னத்தில்
காயம் ஏற்பட்டு தழும்பாக மாறியது. அது அப்படியே இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன்.
தழும்பை மறைக்க பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து கொள்ளப் போகிறேன் என்று வெளியான செய்திகளில்
உண்மை இல்லை.
அறுவை சிகிச்சை செய்யமாட்டேன்.
குடும்ப பாங்கான வேடங்களில் நடித்து வருகிறேன். அதுபோன்ற கேரக்டர்களில் தொடர்ந்து நடிப்பேன்.
கவர்ச்சியாக நடிக்கமாட்டேன்.
No comments:
Post a Comment