நிலக்கரி சுரங்க விவகாரம் குறித்து ஆய்வு செய்யும் மத்திய மந்திரிகள் குழு விதிமுறைகளை மீறி செயல்பட்ட நான்கு சுரங்கஙகளின் அனுமதியை ரத்து செய்ய சிபாரிசு செய்திருந்தனர்.
இந்நிலையில் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரசீத் ஆல்வி இது குறித்து கூறியதாவது:-
நிலக்கரி சுரங்க விவகாரத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு நஷ்டம் என்று தீர்மானித்து அறிக்கை வெளியிட்ட அவர்கள் எங்களுக்கு போட்டியாளர்கள் இல்லை. அந்த அறிக்கை ஒரு அனுமானத்தின் அடிப்படையிலேயே இருக்கிறது.
பிரதம மந்திரி மன்மோகன் சிங்கின் கை சுத்தம். சி.ஏ.ஜி. அறிக்கையின் அடிப்படையில் பிரதமர் மீது யாரும் குற்றம் சுமத்த முடியாது. அங்கு எந்த தவறும் நடக்கவில்லை.ஒப்பந்த மற்றும் நடைமுறை விதிகளை மீறிய நான்கு நிலக்கரி சுரங்கங்களின் அனுமதியை ரத்து செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சி.ஏ.ஜி. அதிகாரிகள் விதிமுறைகளுக்கு உட்பட்டே செயல்பட்டுள்ளனர். அவர்களின் வேலை மாநில மற்றும் மத்திய அரசுகளின் கணக்குகளை சரி பார்ப்பதேயாகும்.
தனியார் நிலக்கரி சுரங்க உரிமையாளர்கள் விதிமுறைகளை மீறி செயல்படுவார்களேயானால் மந்திரியோ அல்லது மந்திரி சபையோ இந்த குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்பாவார்கள். விதிமுறைகள் மீறப்படும் இடங்களை சி.பி.ஐ. கண்காணித்து வருகிறது. இதில் எந்த சமாதானமும் கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.
நிலக்கரி சுரங்க விவகாரத்தில் கணக்கு தணிக்கை குழுவை (சிஏஜி) விமர்சித்து வந்த காங்கிரஸ், தற்போது அதிலிருந்து சற்று விலகி பேச ஆரம்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment