திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்ற பிறகு சோனியா காந்தியிடம் பேச விரும்பியிருக்கிறார். இதுபற்றி காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜனார்த்தன் திவேதி கூறியதாவது:-
மம்தா பானர்ஜி எழுப்பி வரும் பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று நான் கூறியிருந்தேன். அதேசமயம் மம்தாவும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் பேச விரும்பியிருக்கிறார். இதுதொடர்பாக சோனியாவுக்கு தகவல் வந்தது.
இதையடுத்து உடனடியாக மம்தாவை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சி செய்யப்பட்டது. ஆனால் தொடர்புகொள்ள முடியவில்லை. பின்னர் இதுபற்றி அவரது கட்சியைச் சேர்ந்த ரெயில்வே மந்திரி முகுல்ராய்க்கு தகவல் அனுப்பினோம். அதில், சோனியாகாந்தி, மம்தாவிடம் பேச விரும்புவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதேபோல் பிரதமர் அலுவலகத்தில் இருந்தும் தொடர்பு கொள்ள முயன்றார்கள். ஆனால் தொடர்பு கிடைக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே மம்தாவுடன் காங்கிரஸ் பேச விரும்புவதாக எந்த தகவலும் தனக்கு வரவில்லை என்று ரெயில்வே மந்திரி முகுல்ராய் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment