சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. கிஷோர் சமரிட்டே. இவர் கடந்த 2010-ம் ஆண்டு காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்திக்கு எதிராக பொதுநல வழக்கு ஒன்று தொடர்ந்தார். ராகுல்காந்தி இளம்பெண் ஒருவரை கடத்திச் சென்று சிறைவைத்து பாலியல் பலாத்காரம் செய்தார். பாதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும். அவரையும் அவருடைய பெற்றோரையும் மீட்டுத்தர வேண்டும் என்று அதில் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த வழக்கு அலகாபாத் ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, மாநில அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், கிஷோர் மனநிலை சரியில்லாதவர் என்று கூறப்பட்டது. விசாரணை முடிவில் பொதுநல வழக்கு தொடர்ந்த கிஷோருக்கு ரூ.50 லட்சம் அபராதம் விதித்து, அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.
அலகாபாத் ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து, கிஷோர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.எஸ்.சவுகான், சுவாதந்தர்குமார் ஆகியோர் இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட்டனர்.
இதையடுத்து சி.பி.ஐ. தரப்பு வக்கீல் விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்பித்து கூறியதாவது:-
இவ்வழக்கில் மீட்டுத்தர வேண்டி கூறப்பட்டுள்ள பெண் உள்ளிட்ட அனைவரின் விலாசமும் பெயரும் போலியானது. இது குறித்து சம்பந்தப்பட்ட நகரப் பஞ்சாயத்து அலுவலர், மாவட்ட உணவுப் பொருள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரி ஆகியோரிடம் நடத்திய விசாரணயில் அப்படிப்பட்டவர்களின் பெயரோ விலாசமோ இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது. ராகுல் காந்தியின் பெயர் இந்த வழக்கில் வேண்டுமென்றே சேர்க்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment