சமீபத்தில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் சச்சின் தெண்டுல்கர் தொடர்ந்து மூன்று முறை போல்டாகி ஏமாற்றம் அளித்தார். வயதாகி விட்டதால் மாஸ்டர் பேட்ஸ்மேனான சச்சினால் முன்புபோல் விளையாட இயலவில்லை எனவும், களத்தில் அவரது கால் அசைவுகள் சரியாக இல்லாததால்தான் அவர் மோசமான முறையில் போல்டாகிறார் எனவும் கிரிக்கெட் வல்லுனர்கள் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் சச்சினின் மோசமான பார்ம் குறித்து பேசிய பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான் கான், ‘சச்சின் ஒரு சிறந்த வீரர். ஆனால் அவரது இடத்தில் நான் இருந்திருந்தால் புகழின் உச்சத்தில் இருக்கும்போதே ஓய்வுபெற விரும்புவேன். தேர்வாளர்களின் கருணையால் அணியில் இடம்பெறுவதை நான் விரும்பியிருக்க மாட்டேன். சாதனைகள் அடிப்படையில் சச்சின் ஒரு ஜாம்பவான். எனினும் புகழின் உச்சத்தில் இருக்கும்போது ஓய்வுபெற்றால் மக்கள் அவரை மறக்கமாட்டார்கள்’ என்றார்.
மேலும், ‘சச்சினின் ஆட்டத்தை 23 வருடங்களாக பார்த்துக் கொண்டிருக்கும் இந்திய மக்களின் உணர்ச்சியை என்னால் உணர முடிகிறது. சச்சின் இல்லாத கிரிக்கெட்டை அவர்களால் நினைக்கக் கூட முடியாது. கிரிக்கெட்டுக்கு சச்சின் சேர்த்துள்ள பெருமை பற்றியும் எனக்கு தெரியும். ஆனால் தனது ஓய்வை முடிவு செய்வது அவரது சொந்த விருப்பம்’ எனவும் இம்ரான் கான் கூறினார்.
No comments:
Post a Comment