முள்ளிவாய்க்காலில் இறுதிக் கட்டத்தை விடுதலைப் புலிகள் நெருங்கிக் கொண்டிருந்த தருணத்தில், அரசியல் பொறுப்பாளர் பா நடேசன் எழுதிய கடிதம் வெளியாகியுள்ளது. அதில், அண்ணர் (பிரபாகரன்) சொன்னதை வெளியில் சென்று செயல்படுத்துமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் மூலம், போரின் கடைசி மணித்துளிகளில் பிரபாகரன் இட்ட உத்தரவு என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
பா நடேசன் கைப்பட எழுதியுள்ள அந்த கடிதத்தில் உள்ள வரிகள்:
சுடருக்கு,
இங்கு எல்லாம் நிறைவடைந்துவிட்டது. உங்களுக்கு அண்ணர் குறிப்பிட்டதுபோல, எல்லாவற்றையும் வெளியில் சென்று செயற்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். கேஸ்ரோ எல்லாவற்றையும் உங்களிடம் தெரிவித்திருப்பார்.
எதிர்ப்பார்க்காத திருப்பம் ஏற்பட்டது உங்களுக்குத் தெரியும். தெளிவாகக் குறிப்பிடும்படி எதுவும் இல்லை. எனது செய்மதியில் எதுவும் குறிப்பிட முடியாது, அவசரமாக நீங்கள்.
வைகோ அண்ணனைச் சந்திக்கவும் (முடிந்தால்). மற்றபடி இந்தக் கடிதம் கொண்டு வரும் ----- விளக்கமாக தெரிவிப்பார் உங்களுக்கு.
என்று எழுதப்பட்டுள்ளது.
புலிகள் இயக்கம் பெரும் பின்னடைவைச் சந்தித்து, முன்னணி தலைவர்கள் வெள்ளைக் கொடியோடு சரணடைவதற்கு முன் எழுதப்பட்ட கடிதம் இது.
இந்தக் கடிதத்தை தமிழ் ஈழ ஆதரவு தளம் ஒன்று வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment