தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளுக்கும் 20-ம் தேதி பொது விடுமுறை விடப்பட்டுள்ளது. தேர்வு தேதியும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கான கட்டுப்பாடு மற்றும் சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு உள்ளிட்ட மத்திய அரசின் அதிரடி முடிவுகளை கண்டித்து 20-ம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தம் செய்யப்போவதாக எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன.
இதையடுத்து தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் சபிதா இன்று வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:-
அனைத்து பள்ளிகளுக்கும் வருகிற 20-ம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 20-ம் தேதி நடைபெற வேண்டிய 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான காலாண்டுத் தேர்வு, தற்போதைய காலாண்டுத் தேர்வு அட்டவணையின் இறுதிநாளுக்கு மறுநாள் நடத்தப்படும்.
மற்ற வகுப்புகளுக்கு எந்த தேதியில் தேர்வு வைத்துக் கொள்ளலாம் என்பதை அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகள் முடிவு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment